பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

மாகப் புத்தகத்தைப் பயன்படுத்தத் தக்க குறிப்பு நூல் தொகுதி ஒன்று நூலகத்திலே உள்ளது.

குழந்தை நூலகத்திலே பெரியோருக்குரிய சில வெளியீடுகளோடு, குழந்தைக்குரிய பல வெளியீடுகள் உள்ளன. இதற்குக் காரணம், பன்னிரண்டு, பதின் மூன்று வயதான குழந்தைகள், குழந்தை நூல் கண்டு மன நிறைவு கொள்வதில்லை. குழந்தை நூலகத்திலே உள்ள தொல்லைகளிலே இது ஒரு பெருங் தொல்லையாகும். எது? குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்கும் இடைப்பட்டோருக்குரிய நூல்கள் எவை என்று ஆராய்ந்து நூல் தேர்ந்தெடுப்பதாகும். பதினைந்து வயது ஆன குழந்தைகளிலே பெரும்பாலான குழந்தைகள் நூலகத்திற்கு அடிக்கடி வருவதை நிறுத்தி விடுகின்றன. குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவத்துக் குழந்தைகளுக்குரிய நூற்பகுதி சில பாலகங்களிலே உண்டு. எனினும் அதனால் பெரும் பயன் விளைவதில்லை.

அடுத்தது நடுத்தர நகர நூலகம். இந்நூலகம் சிறியதோர் கட்டடத்திலே, குறைந்த எண்ணிக்கையுடைய நூல்கள் கொண்டு அமைக்கப்படும். இந் நூலகத்திலே, குறிப்பு நூலகப்பகுதி, வெளியீட்டுப் பகுதி முதலிய ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி அறையோ, பிரிவோ இல்லை. ஒரு பக்கம் பொது நூல் வரிசையிருக்கும்; மற்றொருபால் முந்தைப்பகுதி காட்சியளிக்கும்; வேறொருபால் குறிப்பு நூல்கள் தோன்றும்; அடுத்த ஒரு பால் வெளியீடுகள் காணப்படும். இத்தகைய நூலகத்-