56
இந் நூலகத்தைச் சேர்ந்த கையெழுத்தேட்டகத்தில், ஐரோப்பாவினைச் சேர்ந்த 54,000 கையெழுத்துச் சுவடிகளும், பிற நாட்டுச் சுவடிகளும் உள்ளன. இவற்றின் காலம் கி. மு. 300 முதல் தற்காலம் வரை ஆகும். இங்கிலாந்து பற்றிய பழமையான வரலாற்றுச் சுவடிகள், ஆங்கில சாக்சன் அரசர்களின் எழுத்துக்கள், ஆர்த்ரேனியன் கதைகள், வெளிவராத ஆங்கிலேய எழுத்தாளரின் நூல்கள், பொன்னெழுத்தேடுகள், மிகப் பழமையான பைபிள், இலியத், ஒடிசி ஆகியவற்றின் மிகப் பழமையான ஏடுகள் முதலியன உள்ளன. அவை உண்மையிலேயே இந் நாட்டின் சிறந்த செல்வங்களாகும்.
எடின்பர்க்கில் உள்ள ச்காட்லாந்தின் நாட்டு நூலகமும் (National Library), வேல்சின் காட்டு நூலகமும் குறிப்பிடத்தகுந்த நூலகங்களாகும். லண்டன் பொருட்காட்சிசாலை நூலகத்தைப்போன்று பெரிய நூலகங்களாக இல்லாவிடினும், அதற்கடுத்த நிலையில் அவை சிறந்து விளங்குகின்றன. அவை செய்யும் தொண்டு அளவிடற்கரியதாகும்.
♧♧