பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. (w) கரிபோலி பிரிவு டில்லி வட்டாரத்தில் பேசப் பெறுகின்றது. இதனையே இந்திய நாடடின் ஆட்சி மொழியாக்கப் பெரு முயற்சி செய்யப் பெற்றது. (ஆ) இந்துஸ்தானி-‘நயா இந்துஸ்தானி ஆகிய வற்றால் ஒற்றுமையை உண்டாக்க முடியவில்லை. (இ) இந்து-முஸ்லீம் ஒற்றுமையைப் பலப்படுத்த முடிய வில்லை. (ஈ) எண்ணிக்கை குறைந்த இதனை எண்ணிக்கை மிக்கவர்மீது திணிக்கவே துணிந்தனர். (2) கொள்கை மாற்றங்கள்: ஆட்சி மாறமாற ஆட்சி மொழிக் கொள்கையும் மாறி மாறி வந்தது. (அ) இந்தியை விரும்பிக் கற்றுக்கொள்ளலாம் என்று கூறியவர்கள் பின்னர் இந்தியைக் கட்டாய பாடமாக்கினர். (ஆ) பின்னர் ஆங்கிலத்திற்கு இணையாக்கினர். (இ) அடுத்து ஆங்கிலத்தைக் கீழே இறக்கி விட்டு அவ்விடத்தில் இந்தியை அரியணையில் ஏற்றத் திட்டமிட்டனர். இதனைக் கோணல் முறையில் செயற்படுத்தினர். பள்ளியில் இந்தி, மைல் கற்களில் இந்தி, இருப்பூர்தி அஞ்சல் நிலையங்களில் இந்தி, தந்தியில் இந்தி, ஆட்சி மொழியில் இந்தி எனப் படிப்படியாக எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ர நிலைக்கு அரசு கொண்டு வந்துவிட்டது. 3.எதிர்ப்புகள், கிளர்ச்சிகள்: தமிழர்கட்கு இதனைப் பார்த்துக் கொண்டு வாளா இருக்க முடியவில்லை. (அ) 1952 ஆகஸ்டு முதல் இருப்பூர்தி அஞ்சல் நிலையப் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளைத் தார் கொண்டு அழிக்கும் இயக்கம் தொடங்கப்பெற்றது. 邻 (శి) 1953, 1954 ஆம் ஆண்டுகளில் (ஆகஸ்டு மாதம்) இத்திட்டம் தீவிரப்படுத்தப் பெற்றது.