பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 & முத்தமிழ்க்காவலன் கி.ஆ.பெ. வி. (இ) தமிழுக்காகப் பலர் தீக்குளித்தனர்; மூட்டைப் பூச்சி மருந்து உண்டு உயிர்துறந்தனர். இந்தக் கிளர்ச்சியில் மாணவர் படையும் பங்கு கொண்டது. (ஈ) இந்தி அரியணையில் ஏறும் நாளான (26-1-65)ஐதுக்க நாளாகக் அனுசரிக்கும்படி தி.மு.க மக்களைக் கேட்டுக் கொண்டது. இதில் 923 பேர்கைதானதில் மாணவர் 124 பேர். (உ) 'தமிழக மாணவர் இந்தி எதிர்ப்புக்குழு கூடி (8.2-65) 9-10-65இல் அஞ்சல் நிலையங்கள் முன்பு மாணவர்களை நேரடியாக மறியல் செய்யும்படி பணித்தது. (ஊ) 11-10-65 அன்று தமிழ்நாடு முழுவதும் இருப்பூர்திகள் நிறுத்தப்பெற்றன. (எ) ஆங்காங்கே கறுப்புக்கொடி ஏற்றுதல், வாகனங் களை நிறுத்திச் சுவரொட்டிகளை ஒட்டுதல், இந்தி எழுத்துகளை அழித்தல், இந்திநூல்களை எரித்தல், 14 தடையுத்தரவை மீறுதல்-இவை நாடெங்கும் இயல்பான நிகழ்ச்சிகளாகி விட்டன. (ஏ) இந்தித் திரைப்படங்களைத் தமிழகமெங்கும் காட்ட முடியாத நிலையை மாணவர்கள் உண்டாக்கி விட்டனர். அவர்கள்.ஆங்காங்கே கைதுசெய்யப் பெற்றுக் கொடுமைகளுக் குள்ளாயினர். இதனால் கிளர்ச்சி மேலும் வலுத்தது. (ஐ, திரு. லால் பகதர் சாஸ்திரி: (முதல்வர்) வானொலியில் பேசிய சில மணித்துளிகளுக்குள் தமிழகத்தில் நடைபெற்ற அடக்கு முறைகளையும், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் அறிந்த மைய ஆட்சியிலிருந்த திரு.சி. சுப்பிரமணியமும் திரு. ஓ.வி. அனகேசனும் தம் பதவிகளைத் துறந்தனர். - - (ஒ) அண்ணலின் செயல்: இந்த நிலையைக் கண்டு கி.ஆ.பெ.வி. 26-1-65 அன்று திருச்சி தேவர் மண்டபத்தில் (மேற்கு அரண்சாலையில் உள்ளது) இந்தி எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டினார். இந்தியை நுழைக்க விட்ட இராஜாஜியும் தம் கருத்தை மாற்றிக் கொண்டு எதிர்ப்பாளர்