பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 : கி.ஆ.பெ.விசுவநாதம் வரலாறு தாங்காது; ஏற்காது. இன்று புதிதாக இல்லறத்தில் வலது காலை எடுத்து வைக்கும் மணமக்கள், இதை உள்ளத்தில் வைத்துத்தம் வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும். சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்கின்றவர்கட்குப் பொறுப்பு அதிகம்" என்கின்றார்." தம்மை ஒரு“நாடோடி" என்றும் 70ஆண்டுகட்கு மேலாக சுற்றிப் பார்த்தவர் என்றும், அறிமுகம் செய்து கொண்டு அவர் கூறும் அநுபவ உண்மைகள்; இந்துக்கள் அல்லாத இசுலாமிய, கிறித்தவ, புத்த, சமண, பார்சியக் குடும்பங்களி லெல்லாம் கணவன்-மனைவி சண்டைகள் மிகக் குறைவு. பாழ்பட்ட தம்முடையச் சமுதாயத்தில்தான் கணவர்மனைவிமார் சண்டைகள் மிக அதிகமாக உள்ளன. இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் திருமணக் காலங்களில், அவரவர்களின் மதக் குருமார்கள், வாழ்க்கை என்றால் என்ன? வாழ்வது எப்படி?’ என்பதை உணர்த்தி, மணமக்களுக்கு அறிவுரையும் கூறி, வாழ்க்கையில் ஈடுபடுத்துகின்றனர். ஆனால் நாமோ, அறியாத ஒருவரைக் கொண்டு வந்து வைத்து தெரியாத சடங்குகள் எவை எவையோ செய்து, புரியாத மொழியில் எது எதையோ சொல்லி, வாழ்க்கை என்றால் இன்னதென்று அறிவிக்காமலேயே, அவர்களுைவாழ்க்கை யில் ஈடுபடுத்தி வருகின்றோம். அதன் விளைவே இது' கி.ஆ.பெ.வி. நடத்தி வைத்த திருமணங்கள் சுமார் 2500 எண்ணை எட்டியிருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இத்தகைய தமிழ்த் திருமணங்கள் நடத்தி வைத்திருக்கின்றார். இந்த முறை திரு வி.க. தம் மக்களுக்கு நடத்தி வைத்த முறை யென்றும் அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்றும் பெருமிதம் கொள்ளுகின்றார் முத்தமிழ்க் காவலர். திருமணம் செய்து வைக்கும்போது இவர் கூறும் அறவுரை இயேசு பெருமான் மலையுச்சியில் கூறிய பத்து கட்டளைகள்போல் 11. ஐக்கட்கு - பக் 12-13 42. கேலது பக் 13-14