பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற நெறியாளர் & 115 பெருமையை உயர்த்துவதன்மூலம், பிறந்த குடிப் பெருமையை நிலைநிறுத்தியாக வேண்டும். இது பிறந்த குடிக்கும் புகுந்த குடிக்கும், பெருமை தேடியதாக முடியும். இதனை மணமகள் தன் உள்ளத்தில் வைத்து வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது. பெண்ணின் கடமை: 5. முதலில் தன்னைக் காத்துக் கொண்டு, பின்னர் தன்னைத் துணையாகக் கொண்ட கணவனைப் பேணி, பிறர் புகழும்படியான வழியில் நடந்து, சோர்வு இல்லாமல், உழைத்து, இல்லறத்தை நடத்துபவளே பெண் என்று வள்ளுவப் பெருந்தகை கூறுவார். தற்காத்துத் தற்கொண்டான்பேணித் தகைசான்ற சொற்காத்துச்சோர்விலான் பெண் (56) என்பது பொய்யாமொழி. இதனைப் பெண் என்றும் மனத்தி லிருத்தி ஒழுக வேண்டும். ஆணுக்கும் கற்பு: - 8, இக்கால மக்களில் சிலர் வள்ளுவர் பெண்களுக்கு மட்டிலும் கற்பை வலியுறுத்திக் கூறி ஆண்களை அடியோடு தவிர்த்து விட்டார் என்று குறை கூறுவர். அது தவறு; உண்மையுமல்ல. ஆண்களுக்கும் கற்பை மிகமிக வலியுறுத்திக் கூறியுள்ளார். ஆவும் பெண்களையே உவமையாகக் காட்டி விளக்கியுள்ளார். "ஆண்மகனே, இதோ பெண்மக்களைப் பாருங்கள். அவர்கள் எங்கனம் பிறர் துணையின்றித் தங்களைக் காத்துக் 13. உவமை அமைக்கும்பொழுது உவமிக்கும் பேசகுனதிய உபயேத்தை விட அதன் இயல்கினைப் புலப்படுத்தும்பொருட்டுஎடுத்துக்கலுப்பெதும் உவaைஉயர்ந்தபொருளாக இருக்க வேண்டும். இது. உயர்ந்ததன் மேத்தே உள்ளும் கலை (உவம். துத்.3 இனம்) என்ற தெல்காப்பிய துத்பவல் அதியப்படும்.