பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ன் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. கொள்கின்றார்களோ, அங்ஙனமே நீயும் கற்பு நெறி வழுவாது தின்று உன்னை நீ காத்துக் கொள்ளாவிடில், உனக்கு ஏதடா பெருமை" என்று கன்னத்தில் அறைவதுபோல, அழுத்தம் திருத்தமாக வினவுகின்றார். ஒருமை மகளிரேபோலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. (974) என்பதுதான் அக்குறள். மணமகளும் மணமகனும் இவண் காட்டப் பெற்ற குறள்களையும் நெஞ்சில் நிறுத்தி அவற்றைத் தம் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இவை தவிர, பிறண்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. (148) என்ற குறளையும் சிந்திக்கலாம். உப்பில்லாப் பண்டம்: 7.திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் உப்பில்லாப் பத்தியம் இருப்பவர்கள். உப்பை எவ்வளவு பெரிதாகக் கருதுகின்றார்களோ, அப்படித் திருமணத்தை எண்ணியிருப்பர். திருமணத்திற்குப்பின் பத்தியம் முறிந்து உப்பைச் சேர்த்துக் கொள்ளும்பொழுது உப்பைப் பற்றி எவ்வளவு சிறிதாக எண்ணுகின்றனரோ, அப்படியே திருமணம் முடித்த பின்னரும், திருமணத்தை எண்ணுகின்றனர். ஆனால் திருமணம் எதற்காக என்று மட்டும் எண்ணுவதில்லை. எப்படியும் வாழலாம் என்பது வாழ்வல்ல; இப்படித்தான் வாழ வேண்டும் என்பதே வாழ்வு. தியாக வாழ்வு: 8. திருமணம் என்பது மணமக்கள் தாங்கள் மட்டிலும் வாழ்வதற்காக அல்ல; பிறரையும் வாழவைத்து வாழ வேண்டும் என்பதை மணமக்கள் முதலில் உணர்தல் வேண்டும்; பிறகு வாழத் துவங்க வேண்டும். வாழ்வில்