பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற நெறியாளர் & 117 தன்னலமற்ற வாழ்வு என்று ஒன்று உண்டு. அதுவே தலை சிறந்த வாழ்வாகும். இதனைத் தியாக வாழ்வு’ என்று வட மொழியில் வழங்குவர். (அ) மழை: மழை மக்கட்கு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றது. அதோடு நின்று விடாமல், தானும் ஒர் உண்ணும் உணவாக மாறி உண்பவர்களின் வயிற்றில் அவர்களை வாழவைத்துத் தான் மடிந்து விடுகின்றது. எவ்வளவு பெரிய தியாகம் இதற்காக அஃது எந்தப் பயனையும் எவரிடமும் எதிர்ப்பார்ப்பதில்லை. கைம்மாறு வேண்டாக் கடப்பாடுடைய மாரி” (2:1) என்று சிறப்பிப்பர் வள்ளுவர் பெருமான். (ஆ) கீழாநெல்லி மஞ்சட்காமாலைக்குச் சிறந்த மருந்து இது. இதனை வேரோடு பிடுங்கி வந்து அனைத்தையும் ஒன்று விடாமல் அரைத்து நோயாளிக்குக் கொடுப்பர். நோயாளி பிழைத்துக் கொள்ளுகின்றான். மருந்துச் செடி பூண்டோடு அழிந்து விடுகின்றது. இவனைப் பிழைக்க வைப்பதற்காகவே அது பிறந்து வளர்ந்தது போன்று காணப் பெறுகின்றது. எவ்வளவு பெரிய தியாகம்: (இ) கோழி: கோழிகளை ஒருவர் விலை கொடுத்து வாங்கித் தம் வீட்டில் வளர்ப்பார். அதற்கு இவர் தீனி போடுவதில்லை. அது பக்கத்து வீட்டிற்குப் போய், அல்லது தெருவிற்குப் போய் அரிசி முதலியவற்றைத் தின்று விட்டு இவர் வீட்டில் வந்து முட்டை இடுகின்றது. இவரையும் இவருடைய பிள்ளைகளையும் தான் முட்டையை நல்கி வளர்க்கின்றது. இறுதியில் தானும் அவர்கட்கு உணவாகி அடியோடு அழிந்து போகின்றது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்கு அஃது அடைந்த பலன் ஒன்றுமில்லை. (ஈ) ஆடு. ஆடு இன்னும் ஒரு படி அதிகம் செல்கின்றது. மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்து, தானே உணவைத் தேடித் திரிந்து, இவர் வயலைத் தேடிவந்து எரு விடுகின்றது. தன்னை விலை கொடுத்துவாங்கினவரின் உணவு