பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ன் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. உற்பத்திக்குப் பெருந் துணை புரிந்து, இறுதியில் அவருக்குத் தன்னையே உணவாகவும் தந்து மடிந்து விடுகின்றது. எவ்வளவு பெரிய தியாகம்; இதற்காக அஃது அடைந்த பலன் யாதும் இல்லை. (உ) சைடு: மாடு காலமெல்லாம் உழைக்கின்றது. அதன் உழைப்பு மிகப் பெரியது. வைத்திருப்பவர் தருகின்ற தீனி, கழுநீர் இவற்றிற்குப் பதிலாக சாணி, சிறுநீர் தந்து அன்றாடம் கணக்கை நேர் செய்து விடுகின்றது. அதன் உழைப்பு தனி. அதற்கு உழவன் கூலியே தருவதில்லை. அது எதையும் எதிர் பார்ப்பதுமில்லை. உழைத்து உழைத்து ஓடாகி விடுகின்றது. இறுதியில் தன் இறைச்சியையும் நல்கிவிட்டு அழிந்து போகின்றது. இதன் தியாகம் கோழி, ஆட்டைப் போலல்லாமல் இன்னும் ஒருபடி தாண்டுவதை நோக்க நம் உடல் மயிர் சிலிர்க்கின்றது; உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்கி எழுகின்றது. இது மட்டுமா? என்பும் உரியர் பிறர்க்கு" (குறள்-72) என்று வள்ளுவர் பெருமான் கூறுவதுபோல் தன் தோலையும் செருப்பாவதற்குத் தருகின்றது. எவ்வளவு பெரிய தியாகம்: இவற்றால் அஃது அடையும் பயன் ஒன்றுமில்லை. (ஊ) ஊதுவத்தி: இசுலாமியர்கள் இறைவனை வழிபடுங்கால் ஊதுவத்தியைக் கொளுத்தி வைக்கின்றனர். பாத்திமா முடிகின்றது. மக்களுக்கு மகிழ்ச்சி. இந்த நற்செயலுக்கு துணைபுரிந்த ஊதுவத்தி எங்கே? அஃது அடியோடு தன்னை அழித்துக் கொண்டு சாம்பலாகி விடுகின்றது. இது அது செய்யும் தியாகம்! (எ) மெழுகுவத்தி: கிறித்தவர்கள் மாதா கோயில்களில் மெழுகுவத்தியை ஏற்றிவைத்து வழிபடுகின்றனர். செபம் முடிகின்றது. மக்களுக்கு மகிழ்ச்சி; இறுதியில் மெழுகுவத்தி காணப்பெறவில்லை. இறைவழிபாட்டிற்கு உதவிய அந்த மெழுகுவத்தி தன்னை அடியோடு அழித்துக் கொண்டு விடுகின்றது. அஃது அது செய்யும் தியாகம்! (ஏ) சூடக்கட்டி: இந்துக்கள் தமது திருக்கோயில்களில் எலுமிச்சைஅளவு சூடக் கட்டியைக் கொண்டுவந்து கொளுத்தி