பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற தெறியாளர் & 119 தெய்வத்தை வழிபடுகின்றனர். வழிபாடு முடிகின்றது. மககளுக்கு ஒரே மகிழ்ச்சி. இறுதியில் சூடம் இருந்த இடமே தெரியவில்லை. இறை வழிபாட்டிற்குத் துணை செய்த அது இறுதியில் தன்னையே அடியோடு அழித்துக் கொள்ளுகின்றது. இஃது அது விளைவித்த தியாகம்! அது பணிபுரியும்போது தியாகச் சுடராகக் காட்சி அளிக்கின்றது. இல்லறவாழ்வில் காலை எடுத்து வைக்கும் மணமக்கள் இந்த நிகழ்ச்சிகளைச்சிந்திக்க வேண்டும். பகுத்தறிவுள்ள நாம் பின்பற்ற வேண்டாமா?’ என்ற எண்ணம் அவர்தம் மனத்தில் கிளர்ந்தெழ வேண்டும். பிறரை வாழவைத்து தாம் வாழ வேண்டும்’ என்ற உண்மையின் ஒளி அவர்கட்குப் புலனாக வேண்டும். வையத்தில் வாழ்வாங்கு வாழ்தல்' என்று இந்த வாழ்க்கையையே நல்லறிஞர்கள் கருதுவது? சிக்கணம்: 9. இல்லற வாழ்வில் மிகவும் வேண்டப் பெறுவது சிக்கனம். எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்றிருப்பது நல்லது. சிக்கனத்தை (Frugality) சிலர் கருமித்தனம் (Miseries) என்ற தவறாகக் கருதுகின்றனர். சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. முன்னது வரவேற்கத் தக்கது; பின்னது வெறுக்கத்தக்கது. எது சிக்கனம், எது கருமித்தனம் என்பதை மணமக்கள் உணர்ந்து கொள்வது நல்லது. (அ) பயணங்களில், (ஆ) நகர்ப்புறங்களில் தங்குவதில், (இ) ஊர் சுற்றிப் பார்ப்பதில் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதை ஊதாரித்தனத்தாலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை சிக்கனத்தாலும் விளக்கிக் காட்டுவர் விசுவநாதம். இம்மூன்றும் நடுத்தர மக்களுக்கு 14. அளவறித்து வானதான் வாழ்க்கை உலபோல இல்லாகித் தோன்றக் கெடும் {479) என்ன வள்ளுவர் வாய்மொழியையும் இனமக்கள் சிந்திக்கலாம்.