பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறநெறியாளர் * 125 இருவரும் தங்கள் காதல் திருமணத்திற்குப் பெற்றோருடைய ஒப்புதலையும் பெற்றுவிட்டனர். ஆயினும் இருவரும் இருவேறு கட்சியினரைச் சார்ந்தவரின் பிள்ளைகள். யாரைக் கொண்டு திருமணம் நடத்துவது என்ற குழப்பத்தினால் இரண்டாண்டுகள் கழிந்தன. இறுதியாக முத்தமிழ்க் காவலருக்கு நடத்தி வைக்கும் பொறுப்பு வந்தது. நடத்தி வைத்து 'எல்லாவற்றிலும் ஒன்றுபட்ட நீங்கள் ஒருவருக் கொருவர் ஒத்த உரிமையும் கொடுத்து வாழுங்கள்” என்று அறிவுரை கூறித் திரும்பினார். 'ஒத்த உரிமை என்பதில் கருத்து மாறுபாடு. சிறு சிறு விஷயங்களிலெல்லாம் தகராறு மணமகனிடமிருந்து கடிதம் வந்தது. 'முத்தமிழ்க் காவலர் அறிவுரையால் வந்த வினை' என்றிருந்தது அதில். ஓர் அஞ்சலட்டையில் 'அடக்கிப் பார்” என்று எழுதினார். மிரட்டிப் பார்த்தார்; அடங்கவில்லை. மீண்டும் கடிதம் வந்தது. இதற்கு அடங்கிப்போ என்று பதிலிறுத்தார். இது பெரும்பலன் தந்தது. படித்த பெண் அல்லவா? அடக்க அடக்க அடங்காத பெண் அடங்க அடங்க அடங்கிப் போய்விட்டாள். அவர்கள் வாழ்வில் நல்லொளி வீசியது. இதிலிருந்து ஓர் உண்மை; அடங்கிப் பார்க்க வேண்டும்; முடியாது போனால் அடங்கிப் போக வேண்டும். இழுபறி கொண்டிருக்கக் கூடாது. பொறி வண்டியானாலும், இரட்டை மாட்டுவண்டியானாலும் ஒற்றை மாட்டு வண்டி யானாலும் வண்டியை ஒட்டுபவர் ஒருவராய்த்தான் இருக்க வேண்டும். இருவரால் ஒட்டமுடியாது. ஒட்டினாலும் வண்டி சரியாக ஓடாது. அது போலத்தான் இல்லறமும். ஆண் நடத்துவதில் பெண் தவறு கண்டால், குடும்பத்தையும் வருமானத்தையும் பெண்ணிடம் ஒப்படைத்து விட வேண்டும். இதனால் ஆண்டு முழுவதும் போராட்டமோ தொல்லையோ இராது, இல்லறமும் இனிமையாக, அமைதியாக நடைபெறும்.