பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. வி. (9) செரிமானமின்மைக்கு (பக். 32): ஒமத்தைத் தேய்த்து, உமியைப் போக்கி, அரைத்து பிள்ளைப்பால் அல்லது பசும்பாலில் கலக்கிக் குடித்தால் செரிமானமின்மை, மந்தம், வயிற்றுப்போக்கு முதலியனநீங்கும். பெரியவர்கட்குதேம்படி எடை ஒமமும், குழந்தைகட்கு 1 தம்படி ஒமமும் போதும். பத்தியம் இல்லை. உணவு, அரிசிக் கஞ்சி. (10) விதர் வீக்கத்திற்கு (பக். 34): மூன்று வழிகள்: fi) கழற்சிக் கொட்டைகளை உடைத்து அதன உள்ளிருக்கும் பருப்பில் 5 எடுத்து அரைத்துத் தடவினால் வீக்கம் மூன்றே மணித்துளிகளில் வடியும். {i, புதா மலத்தையும் தேங்காய்த் திருவிய பூவையும் கலந்து இருப்பு வாணலியில் போட்டு வறுத்து ஒத்தடம் கொடுத்தால் உடனே வீக்கம் வடியும். (iii) தேங்காய்ப்பூவில் புறா முட்டையை உடைத்து ஊற்றி வறுத்து ஒத்தடம் கொடுத்தால் 15 மணித்துளிக்குள் குணத்தைக் காணலாம். தமிழ் மருந்துமுறை அழிவு: இன்று தமிழ் மருத்துவ முறை பெரும்பாலும் அழிந்து விட்டது. இதற்குத் தமிழ் மருத்துவர்களே ஒருவகைக் காரணமாவர். வறுமை வாய்ப்பட்ட மக்களில் சிலர் தங்களை மருத்துவர் என்று சொல்லியும், தங்களிடமிருப்பது மருந்து என்று சொல்லியும் தவறு செய்தமையால் பொது மக்களின் நம்பிக்கை கெடத் தொடங்கியது. மருத்துவ நூலிலுள்ள கவிதைகளையும், அதில் மறை பொருளாகச் சொல்லப்பெற்ற மருந்துகளின் பெயர்களையும் அறியாமலும் புரியாமலும் இளம் மருத்துவர்கள் பலர் தவறு செய்யத் தொடங்கினர். இதனால் பொது மக்கள் சிறந்த பண்டிதர்களையும், உயர்ந்த மருத்துவர் களையும், அவர்களிடம் உள்ள தகுந்த மருந்துகளையும் ஐயுறத் தொடங்கினர். இவையும் சித்தமருத்துவம் அழியக் காரணமாயின.