பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருபவ நாயகர் "அவரவர் பட்டால்தான் தெரியும் என்பது மக்களிடையே அடிக்கடி நிலவும் ஒரு வாசகம். படுதல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது பட்டறிவு என்ற சொல். இதுதான் வட மொழியில் அநுபவம் என்று பெயர்பெற்றது. சில சமயம் தூய தமிழ்ச்சொல்லை விட பிற மொழிச்சொற்கள் மக்களிடம் பேச்சு வழக்கில் மிகச் செல்வாக்கு அடைந்து விடுகின்றது. 'தொலைக்காட்சி என்ற சொல் இருப்பினும் சன் டி.வி. என்ற சொல்தான் பேச்சு வழக்கில் மிகச் செல்வாக்கு பெற்றுள்ளது. 'சன் செய்திகள்' என்று தொலைக்காட்சியில் அடிபடுவதை நோக்கலாம். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டாலும் ஆங்கிலப் பண்பாடு மக்களிடையே ஆழப்பதிந்து விட்டது. 'தமிழ் வழிக்கல்வி' என்று ஒரு சிலர் ஓயாது கூக்குரல் இட்டாலும், அரசும் இதை நடைமுறைப் படுத்துவதில் மதில் மேல் பூனை” என்றிருந்தாலும், மக்களில் பெரும்பாலோரிடம் ஆங்கில வழிக் கல்வி மோகம் அசுர வேகத்தில் இருந்து வருகின்றது. இலட்சக்கணக்காகச் செலவு செய்து மருத்துவம், பொறியியல் படிப்பை நாடுகின்றது. கோயில் குருக்கள் 1. 1957-இல் தான் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிசியனாக இருந்தபோது ஆறாண்டுகள் கடுமையாக உழைத்து தமிழ்ப் பயிற்றும் முதை என்ற பெரிய நூல் (550 பக்) வெளியிட்டேன். அப்போது பட்டதிவு என்ற சொல் உருவாகித்து. இ. 10.