பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவ நாயகர் * 143 இந்நூலில் சில பொறுக்குமணிகளை ஈண்டுத் தருகின்றேன். (1) முடத்தெங்கு (முதல் கட்டுரை) இது பாட்டனுக்கும் பேரனுக்கும் நடைபெறும் உரையாடல் முறையில் அமைந்துள்ளது. . 'நெல்லிற்பிறந்த பதர்களைப் போல் மனிதருள்ளும் பதருண்டு. அவர்கள் மனிதப் பதர்கள் என்றும் வழங்கப் படுவார்கள். விரிவு எதற்கு? குரங்கும் கோட்டானும் நாயும் நரியும் கூட மனிதருள் உண்டு என்றால் முடத்தெங்கு இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?” (பாட்டன் பக்.9) 'தன்னைப் பெற்ற தந்தையைத் தளர்ந்த வயதில் தள்ளாடவிட்டுவிட்டு, மாமனார்விட்டோடு மகிழ்ந்து வாழும் மகனும் ஒரு முடத் தெங்குதான்” (பாட்டன்-9) 'நான் முடத்தெங்காக வாழப் போவதில்லை; மற்றவர்களையும் முடத்தெங்கலாக வாழ விடுவதில்லை; யானும் முடத்தெங்குகளைத் தோற்றுவிப்பதுமில்லை என இன்று உங்கள் முன் உறுதி கூறுகின்றேன். என்னையும் என்னைப் போன்ற இளைஞர்களையும் வாழ்த்துங்கள்' (பேரன் - பக்18) - (4) ஆமை (பக்.24): 'ஒருமையில் ஐந்தடக்கும்ஆமை (குறள்-126) என்பது வள்ளுவம். இது கண்ணுக்குப் புலனாகும்ஆமை. கண்ணுக்குப் புலனாகாத ஆமை என்று ஒன்று உண்டு. அஃது ஆற்றாமை. இந்த ஆமை வாழும் ஆறு வெண்ணாறுமன்று; வெட்டாறு மன்று: பாலாறுமன்று; பெரியாறுமன்று. இது வாழும் ஆறு அழுக்காறு ஆகும். பிற ஆறுகளின் இரு கரைகளிலும் கோட்டுப்பூ, கொடிப்பூ, செடிப்பூ ஆகிய பல வகைப் பூக்கள் பூக்கும். இந்த ஆற்றின் இருகரைகளிலும் எரிப்பு ஒன்று மட்டுமே பூக்கும். ஆற்றாமை, அழுக்காறு, எரிப்பு என்பவை பொறாமை' என்பதைக் குறிக்கும் சொற்கள்.