பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. நல்லதைக் கொள். பின் அப்படியே நட. ஏனெனில் கல்வியின் குறிக்கோள் அறிவை அடைவது மட்டுமல்ல. அன்பையும் அருளையும் பண்பையும் ஒழுக்கத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ்வது ஆகும்.” (2) கேள்விச் செல்வம்: கேள்வியும் ஒரு செல்வம். 'கற்றலில் கேட்டலே நன்று'. இதனை, செல்வத்துள்செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (411) என்ற வள்ளுவம் மெய்ப்பிக்கும். 'கேள்விகளுக்கு விடையளிப்பதில் வக்கீல்களும் டாக்டர்களும் மிகுந்த விழிப்பாக இருத்தல் வேண்டும். அவர்கட்கு உண்மைத் தெளிவாகத் தெரிந்திருந்தாலும் அவற்றை வெளிப்படையாகக் கூறாமல் சிறிது சுற்றி வளைத்துக் கூறுவதே நலமாக இருக்கும். 'உயிர் போய் விடும் என்று கூறிய கேசுகள் பிழைத்துக் கொண்டதால் கெட்டுப் போன டாக்டர்களும், "தோற்றுப் போகும்' என்று கூறிய 'கேசுகள் வெற்றி பெற்றதால் அழிந்து போன வழக்குரைஞர்களும் பலர் உண்டு. "வாய்க்கு இரண்டு கதவுகள் இருப்பது ஏன் தெரியுமா? எப்போதும் மூடி வைப்பதற்கு. காதுகளுக்குக் கதவுகள் இல்லாமல் இருப்பது ஏன் தெரியுமா? எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதற்கு. வாய் ஒன்றும் காது இரண்டுமாக அமைந்திருப்பது ஏன் தெரியுமா? குறைவாகப் பேசு; அதிகமாகக் கேள்' என்பதற்கு இன்றைய தினம் உயர்ந்த அறிஞர்களாகவும் சிறந்த செயலர்களாகவும் உள்ள தலைவர்களெல்லாம் குறைந்த பேச்சு உடையவர்களாகவே காணப்படுகின்றனர்." காதுக்கும் வாய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாய் நல்லதைச் சொல்ல வேண்டுமானால் காது நல்லதைக் கேட்டிருக்க வேண்டும். வாய் வணக்கமாக இன்னுரைகளைக் கூற வேண்டுமானால், காது இணக்கமான நல்லுரைகளைக்