பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபவ நாயகர் * 151 என்று பொய்யில் புலவன் வழி நின்று விளக்குவார். ஒழுக்கம் இழந்தவன் தான் செய்யாது பிறர் செய்த பழியையும் ஏற்க வேண்டி வரும் என்று 'எய்துவர் எய்தாப் பழி' என்ற தொடருக்குக் கூறியதன் விளக்கம் அண்ணலின் நுண்மாண் நுழைபுலத்திற்குச்சான்று. எத்தனையோ கலைகளைக் கற்கும் மாணாக்கர்கள் அரசியலையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை; நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் செயற்படக்கூடாது. 'அரசியலில் தலையை இட்டால் காலைக் கல்லூரியிலிருந்து எடுத்துவிட வேண்டும். அரசியலில் தலையையும், கல்லூரியில் காலையும் வைத்துக் கொண்டு நடப்பது மாணவர்க்கு மட்டிலும் கேடு பயப்பதல்ல, தாட்டுக்கும் வீட்டுக்குமே கேடு பயப்பதாக முடிந்து விடும்' என்பது அண்ணலின் அதிராக் கொள்கை. காஞ்சிப்பள்ளி உரை யேசுநாதர் மலையுச்சிப் பொழிவையும் போர்க்களத்தில் தேர்த் தட்டிலிருந்து கொண்டு பார்த்தனுக்குப் பரந்தாமனே அருளிய உபதேசத்தையும் நிகர்த்தது என்று சொல்லிவைப்பதில் குறையொன்றுமில்லை. 6. அறிவுக்கதைகள் (1989". இந்தத் தலைப்பில் 100 நிகழ்ச்சிகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. இதைப்பற்றி அண்ணலே கூறுவது: “சில படித்தவை; சில பார்த்தவை; சில கேட்டவை; சில கற்பனை' என்பது. பாரதத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் கானகத்தில் தங்கியிருந்தனர். அப்போது பல்வேறு வரலாறுகளை (கதைகளை) அறிந்தனர்; அறிவுத் தெளிவு பெற்றனர். அதுபோல அண்ணல் தம் வாழ்வில் அறிந்த பல நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுகின்றார். எல்லாம் அநுபவக் களஞ்சியம். இவரே ஓர் அநுபவக் களஞ்சியம். இந்த நூல் 8 பகுதிகளாக நடைபெறுகின்றது. சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். 12. இதன் இரண்டாம் பதிப்பு (1992) பார் நிலைய வெளியீடு.