பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. 1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்." ஐம்பத்தைந்து ஆண்டுகட்கு முன் ஒரு பள்ளிப் பாடநூலில் கண்ட கதை. வயதான தந்தையைத் தெருத்திண்ணையில் அமர்த்தி சட்டியைக் கொடுத்து நாடோறும் அதில் உணவு போட்டு வைத்து அவர் உண்ணும்படி ஏற்பாடு செய்திருந்தான் ஒருவன். பல நாட்கள் இந்தத் திருத்தொண்டு தொடர்ந்து நடைபெற்று கிiந்தது. ஒருநாள் அதில் உணவு இடப் போகும்போது சட்டி காணப் பெறவில்லை. இச்செய்தியைக் கணவனிடம் தெரிவிக்கின்றாள் மனைவி. சட்டி எங்கே என்று கேட்டு அவரைத் திட்டி அடிக்கவும் கை ஓங்குகின்றான் அவன். 'அருமருந்தப் பிள்ளை அப்போது ஓடி வந்து, "அப்பா, நான்தான் அந்தச் சட்டியை எடுத்து ஒளித்து வைத்துள்ளேன்" என்று கூறினான். 'ஏன் மகனே?’ என்று அவனைக் கேட்டதற்கு, சிறுவன், 'உங்களை இவ்வாறு திண்ணையில் உட்கார வைத்து உணவு வழங்க எனக்கு ஒரு சட்டி வேண்டாமா? அதற்காகத்தான் அதனைப் பாதுகாப்பாக வைத்துள்ளேன்' என்றான். தன் மகனுடைய சொல்லைக் கேட்டு தந்தை, “தனக்கும் இப்படி நேரிடுமோ?' என்று அஞ்சினான். தன் எதிர்கால நிலையை எண்ணித் திருந்தினான். இதனால் நாம் அறியும் உண்மை: தினை விதைத்தவன்தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ஒருவன் செய்கின்ற செயல்களின் பயன்களை பெரும்பாலும் இப்பிறவியிலேயே அநுபவிக்க நேரிடும் என்பதற்கு இஃது ஒரு சான்று. 13. அதிவுக் கதைகள் பக்.28