பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 & முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. இந்த நிலையில் கூட்டத்தை விலக்கி கையிலே ஒரு பூமாலையை எடுத்துக் கொண்டு ஒருவர் வேகமாக உள்ளே துழைகின்றார். ஒத்து ஊதிக் கொண்டு பக்கத்தில் நின்றவருக்கு மாலையைப் போடுகின்றார். எல்லோரும் 'என்னங்க யாருக்கு மாலையைப் போட்டீங்க?" என்று கேட்க, அவர் "மதுரை பொன்னுசாமிக்குதான் என்கின்றார். அவர்கள் 'அவுரல்ல, இவர்தான் பொன்னுசாமி என்று சுட்டிக் காட்டிச்சொன்னதும் வந்தவர் 'இவரை விட அவர் நன்றாக வாசித்தாரே' என்கின்றார். 'எப்படி ஐயா கண்டீர்கள்? - என வியந்து வினாவ, மாலை போட்டவர் ‘இவர் விட்டு விட்டு வாசிக்கின்றார் அவர் விடாது வாசிக்கின்றாரே' - என்று விடையிறுக்கின்றார். எழுபது ஆண்டுகட்கு முன்பே - நம்மில் சிலர் இசையைச்சுவைத்த அழகு இது: 莎。 வதநஞ்சப்பிள்ளை" 65 ஆண்டுகட்கு முன்பு - தஞ்சைக்கு அடுத்த கரந்தையில் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா. தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்னின்றும் நடத்தும் விழா. முதலில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் பேசினார்கள். அதன் பின்னர் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பேசினார்கள். இறுதியாக, சேலம் மாவட்டத்துச் சிற்றுார் தாரமங்கலம் அ. வரதநஞ்சப் பிள்ளையவர்கள் பேச வந்தார்கள். பிள்ளையவர்கள் பேசத் தொடங்கும் பொழுதே, "இந்த நாட்டாரும் நகரத்தாரும் பேசிய பிறகு இந்தக் காட்டானை ஏன் 48. அதிவுக்கதைகள் - பக் 128