பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 ❖ முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி.


பெரியோர்களின் தொடர்பும் நல்ல நண்பர்களின் இணக்கமும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

நினைவு - 1: 1934-இல் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இடைநிலைப் படிப்பில் முதலாண்டு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். செகப்பிரியரின் நாடகங்களைப் பற்றி உரைநடையில் படித்து அநுபவித்த காலம். ஜூலியஸ் சீசர் நாடகத்தில் புரூட்டஸ், அந்தோணி இருவரும் சிறந்த பேச்சாளர்கள். இவர்களுள் அந்தோணி கதை மாந்தன் என்னை அதிகமாகக் கவர்ந்தான். அவனைப் பற்றி ஒரு கற்பனை உருவம் என் மனத்தில் இருந்து கொண்டிருந்தது. தனியாக நூலக நூல்களைப் பயிலும் பழக்கத்தால் ஏற்பட்ட விளைவு இது. ஜூலியஸ் சீஸர் நாடகமும் பாடமாக இருந்து அதனைக் கற்பித்த லாரன்ஸ் சுந்தரமும் நினைவுக்கு வருகின்றார்.

அக்காலத்தில் 'சவுக்கு' என்ற பகுதியிலுள்ள காசியப்பர் இராவுத் ஸ்டோர்ஸ் தங்கும் விடுதியில் அறையொன்றில் தங்கிக் கொண்டிருந்தேன். மாலை நேரங்களில் கூட்டங்கள் எங்கு நடைபெற்றாலும் அவற்றில் கலந்து கொண்டு அறிஞர்கள் பேச்சுக்களைச் செவிமடுப்பதுண்டு. பெரும்பாலும் டவுன் ஹால் மைதானத்தில் அரசியல் கூட்டங்களும், மலைக் கோட்டை யானை கட்டித் தெருவில் கீழ்க் கோடியில் உள்ள மண்டபத்தில் சைவ சித்தாந்தக் கூட்டங்களும், மலைக் கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் சமய, இலக்கியக் கூட்டங்களும் வழக்கமாக நடைபெறும். சில சமயம் தெப்பகுளத்துக்கருகிலுள்ள பிஷப் ஹீபர் கல்லூரி மண்டபத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு.

ஒரு சமயம் பேராசிரியர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா பிஷப் ஹீபர் கல்லூரியில் பேசுவதாக அறிவிப்பு கிடைத்தது. அப்போதுதான் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களைக் கண்டேன்.[1] என்னுடைய பேராசிரியர் மு. நடேச


  1. அப்போது அவருக்கு அகவை 35. அநுபவம் மிக்க சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தவர். எனக்கு வயது 17-18. நாட்டுப்புத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு முதன்முதலாக வந்த ஆரம்பகாலம் எந்தவித அநுபவமும் இல்லாத 'காட்டான்'. இலக்கிய அறிவு பெற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த காலம்