பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகப் புலவர் குழு கண்ட புரவலர் : 185 (7) தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழர் பண்பாடு, கலை, நாகரிகம் ஒழுக்கம் முதலியவற்றைத் தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் பரவச் செய்வதற்கான வழி வகை யாவற்றினையும் மேற்கொள்ளுதல்; இதழ்களை நடத்துதல். முக்கிய பகுதிகள்: இயல் இசை நாடகமாகிய முத்தமிழையும் வளர்த்தல் என்பதும், கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடைபெற்று வரும் என்பதும், ஒவ்வொரு கூட்டமும் அடுத்தடுத்துக் கூடும் மாவட்டத்தையும், இடத்தையும் முடிவு செய்யும் என்பதும் இக்குழுவின் சட்டதிட்டங்களில் காணப் பெறும் முக்கிய பகுதிகளாகும். தமிழ்நாடு முழுவதும் இப்புலவர் குழுவைப் போற்றி வரவேற்றது. தமிழ் அரசு ஏட்டிலும் (gaz:tta) இது பதிவு செய்யப் பெற்றது. நடைபெற்றவை:தமிழகப் புலவர் குழு தமிழ் நாட்டில் 13 மாவட்ட்ங்களிலும் உலாச் சென்று முடிந்து, புதுவை மாநிலத்தில் புதுச்சேரியிலும், கர்நாடகத்தில் பெங்களூரிலும், ஆந்திரத்தில் திருப்பதியிலும், மராட்டியத்தில் மும்பையிலும் (பம்பாய்), இந்தியத் தலைநகர் தில்லியிலும் கூடியுள்ளது. பொதுவாக 33 தடவை பல்வேறு இடங்களில் குழுமியிருந்து 34வது கூட்டத்தைத்தம் சொந்த இடத்தில் கூடி மகிழ்ச்சியுற்றது. தமிழகம் முழுவதும் பிற இடங்களிலும் புலவர்குழு உலாவந்த நாள்களெல்லாம் தமிழ்த் திருவிழா நாள்களாகச் சிறந்து விளங்கின. இவற்றிற்கெல்லாம் பெருவிசையாக இயங்கின் நம் அண்ணலுக்குப் புலவர் குழு உறுப்பினர்களும் தமிழக மக்களும் மிகவும் கடமைப்பட்டவர்களாகின்றனர். நிதி நிலைமை: ஒர் இலட்சம் சேர்த்து அம்முதலீட்டின் வருவாயைக் கொண்டு புலவர்க்குழுவை செயற்படச்செய்வது என்பது குழுவின் பொருளாதாரக் கொள்கையாகும். இதுவரை கி.ஆ.பெ.வி. அவர்கள் சொற்பொழிவுகளின் மூலம் கிடைத்த பொருளுதவியைக் கொண்டே குழு இனிது நடை 4. வறுமையினாலும் பிறவற்றாலும் எங்கும் செல்லாமல் சினந்துத் தவளைகளாக உள்ள பல புலவர்கட்கு விரிந்த மனநிலையமையும் பரந்த நோக்கங்களும் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.