பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகப் புலவர் குழு கண்டபுரவலர் * 187 ஆகியோருக்குத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் சிறப்பு டாக்டர் பட்டங்கள் வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்து முடிவு எடுத்துள்ளது சிறப்பித்துக் கூறத்தக்கது. (2) புலவர் குழு தமிழுக்குரிய பாட வேளைகளைக் குறைக்கக் கூடாது என்று வற்புறுத்துகிறது. தமிழ்ச்சொல் அகர வரிசைநிறுவனம் ஒன்றை விரைவில் தொடங்குமாறு கேட்டுக் கொள்கின்றது." ஆங்கிலத்தின் வாயிலாகப் பிற பாடங்களைக் கற்பித்து வரும் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி இவற்றில் தமிழிலேயே அவற்றைக் கற்பிக்கும்படி வற்புறுத்துகின்றது." தாய்மொழி வளர்ச்சிக்காகத் தமிழ்க் கல்லூரிகளை இணைக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகழ் ஒன்றைத் தமிழ்கத்தில் ஏற்படுத்துமாறு கோருகின்ற்து.' அனைத்து நாட்டுத் தமிழாராய்ச்சிக் கழகத்தார் நடத்தி வருகின்ற நிலையத்தைத் தமிழக அரசே ஏற்று நடத்தும்படிப் பரிந்துரைக்கின்றது. இந்தியப் பண்பாட்டின் அடிப் படையாகவும், அதன் சிறப்பின் வேர்ப் பகுதியாகவும் உள்ள தமிழ் நூல்கள்; தமிழக வரலாறு, தமிழர் பழக்க வழக்கங்கள், புதிய உண்மைகள்-இவற்றை இந்நாட்டுத்தமிழர்களும், பிற நாட்டிலுள்ள தமிழ் மக்களும் அறிந்து புரிந்து கொள்ளப் பணி புரிவதென முடிவு எடுத்துக் கொண்டுள்ளது. புலவர் குழுவிற்காகச் சொந்தமாக வாங்கப் பெற்ற கட்டடத்தில் புலவர் பெருமக்களின் உருவப்படங்களை இடம் 8. அனையோர் வாயில்லாப் பூச்சிகள்போல் வாளா இருத்தமையால் இவர்கள் சார்பில் ஒன்றும் தடைபெறவில்லை. 3.தேவைேபப் பாவாணரைத் தலைவராகக் கொண்டு அகர முதலி நிறுவனம் ஒன்றை அரசு தொடங்கியது. 19.பெகும்பாலான பெற்றோர்கள் ஆங்கில வழிக்கல்வியையே விரும்புவதால், குடியாக ஆட்சியில் அரசு விரைந்து செயற்பட முடியவில்லை. 11. எம்.ஜி.ஆர். ஆட்சியில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தேடங்கப் பேந்தது (இணைக்கும் பல்கலைக்கழகம் அல்ல) தவிர, பாதியார் பெயரில் கோவையிலும், பாதிதாசன் பெயரில் திருச்சியிலும் பல்கலைக்கழகங்கள் தோத்துவிக்கப்பேத்தன. இவையெல்லாம் நடைபெற நம் அண்ணலின் தொலைநோக்கே முதற்கசரண:ைகும்.