பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. (2) இனிமைச் சிறப்பு: கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவருமாறு சொல்லியிருந்தார் அண்ணல். அவன் அன்று வராமல் மறுநாள் வெறும் கையோடு வந்து நின்றான். அண்ணல் கோபித்தார். அவன் பேசினான். 'நேற்று மலைக்கு நடந்தேன். பலவிடங்களிலும் அலைந்தேன். இறுதியில் பெரும்பாறைத் தேன் கண்டு சிறிது கலைத்தேன். ஒரு கொடியைப் பிடித்தேன். எதிர் சென்று கலைத்தேன். சட்டியில் பிழிந்தேன்.... நன்றாக வடித்தேன். அதனைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; கனைத்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன். இன்று காலை எழுத்தேன்; நினைத்தேன், தேனை அடைந்தேன்.எடுத்தேன். விரைந்தேன். நடந்தேன். வந்தேன். சேர்ந்தேன். இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்’ என்று. இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல், 'படித்தேன்" என்று கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி ‘தேன் என்று சுவைக்கும்’ என்கின்றார் அண்ணல். தமிழின் இனிமை தேனாக வடிகின்றது; இனிக்கின்றது. (3) எனிலைச் சிறப்பு: தமிழ் மொழி எழுதவும் படிக்கவும் பேசவும் எளிதானது. இச்சிறப்பைப் பிறமொழிகளில் காண இயலாது. தமிழ் எழுதுக்களே 30 (ஆய்தத்தை நீக்கி). 'உயிரும் உடம்புமாம் முப்பது முதலே' தமிழ் மொழி பேசவும் எளிது. தமிழ்ச் சொற்களில் 100 எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லையும் ஒலித்துப் பார்த்தால் அவை மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனி நாக்கு அடி நாக்கு, நடு நாக்கு, அண்ணாக்கு, உள்நாக்கு கொண்டே ஒலிப்பதாக இருக்கும். தொண்டைக்குக் கீழ் வேலையே இராது. பிற மொழிச்சொற்கள் சிலவற்றிற்கு 100க்கு 30-40 வீதமும் சிலவற்றிற்கு 60-70 வீதமும் தொண்டைக்குக்