பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. அரசனையும் உயிரற்ற உடலாக்கிக் கூறும் பாட்டு என இம்முதலும் முடிவும் சுட்டுகின்றது என்று அண்ணல் குறிப்பிடும் எட்டாவது நயம், ஆறாவது கருத்துப் பொருள் மிக நன்று; மிக நன்று. விரி வஞ்சி பிற சிறப்புகள் விடப் பெற்றன. அவற்றை அண்ணலரின்நூலில் கண்டு மகிழ்க. 1. நீதி நதல்கள்: அண்ணல் விசுவநாதம் தாம் பங்கு கொண்ட துறைகளிலெல்லாம் ஒழுக்கத்தையும் கடைப் பிடிப்பவர்; ஒழுக்க சீலர். ஒழுக்கத்தை உயிரினும் ஒம்பியவர். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் (131) என்ற குறள் மணியின் ஒளியில் நடமாடியவர். சிறுவர்க்கும் இளைஞர்கட்கும் பயன்படும் பொருட்டு (அ) நல்வாழ்வுக்கு வழி (ஆ) மும்மணிகள் (இ) நான்மணிகள்’ என்ற மூன்று நூல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பாடல்களும் உரையும் எதிரெதிராக அமைந்து படிப்போருக்கு உதவியாக உள்ளன. (அ) நல்வாழ்வுக்கு வழி: ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ஒளவைப் பெருமாட்டி அருளிய மூதுரை 30ம், நல்வழி 40ம், 250 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த துன்றமங்கலம்’ சிவப்பிரகாச அடிகள் அருளிய நன்னெறியில் 30 உம் ஆக 100 வெண்பாக்களைப் பொறுக்கி எடுத்து அவற்றின் எளிய உரைநடையில் கருத்துரையுடன் வெளியிடப் பெற்ற நூல் இது. அண்ணலாருக்கு அகவை ஏழில் அவர்தம் தந்தையார் அளித்த செல்வங்கள் இவை. நாள்தோறும் ஒவ்வொரு வெண்பாவாக 8. இம்மூன்றும்ப நிலையவெளியீடுகள் முறையே நான்காம்பதிப்பு 1991; பத்தாம் பதிப்பு 1991; sgriaus ing i 384. 8. ம்ேபலூருக்கு அருகில் சாலையின் மீதுள்ள ஒரு சிற்றும்.