பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காதலர் : 31 (5) வள்ளுவர் உள்ளம்" இவை ஐந்தும் வள்ளுவர் நெறி பரப்பும் கருவிநூல்கள். அண்ணல் சொல்லியபடி நடப்பவர். ஒழுக்கம் அவர்தம் மூச்சு. ஒழுக்கம் தவறியவர்களைக் கண்டால் சீறுவார். சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் (664) என்ற குறளில் உள்ள 'சொல்லுதல் யார்க்கும் எளிய' என்பது பிறர் பின்பற்றும் நெறி. சொல்லிய வண்ணம் செயல் நம் அண்ணல் கடைப்பிடிக்கும் நெறி. இன்று நாம் காண்பதெல்லாம் ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாண்டங்காப் பேதையின் பேதையா இல் (334) என்ற குறள் குறிப்பிடும் பேதையர்களையே. (1) திருக்குறள் புதை பொருள்: இந்த நூலின் இரண்டு பகுதிகளையும் படிப்போர் 'அண்ணல் ஆய்ந்து கற்ற ஆய்வாளர்' என்பதை நன்கு அறிவர். முதற் பகுதியில் 12 குறள் மணியின் பொருளையும், இரண்டாம் பகுதியில் 10 குறள் மணியின் பொருளையும் கோலார் தங்க வயலில் தோண்டத் தோண்ட தங்கம் கிடைப்பது போல் "தோண்டித் தோண்டி' ஆழ் பொருளைக் காட்டுகின்றார். 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி (396) போல் இக்குறள் மணிகளில் புதை பொருளைப் புலப்படுத்துகின்றார். 'ஒழுக்கம் விழுப்பம் தரலால் (131) என்ற குறளில் உயிரினும் என்ற சொல்லுக்கு இவர் தோண்டித் தோண்டிக் காட்டும் துண் பொருளும் (முதல் பகுதி பக்10-13) 'கொல்லா நலத்தது (984) என்ற குறளில் பிறர் என்ற சொல்லுக்கு அகழ்ந்து காட்டும் புதை பொருளும் (முதற்பகுதி பக். 17) உடுக்கை இழந்தவன் (988) என்ற குறளில் 13. இவை இந்தும் பசி நிலைய வேளியீடுகள். முறையே பதினோம் பதிப்பு 1880, நான்காம் பதிப்பு (1898), பதின்மூன்றாம் பதிப்பு 1990, ஒன்பதாம் பதிப்பு 1990. ஒன்பதாம் பதிப்பு 1980, ធ្ឫធម៌ uប់បុ 1894.