பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர் திலகம் & 45 'அநுபவம் என்பர் சிலர்; நண்பர்கள் என்பர் சிலர்; 'குடும்பம்’ என்பர் சிலர் அரசு உதவி' என்பர் சிலர்; நல்ல விளைவு காலம்’ என்பர் சிலர்; நல்ல பஞ்ச காலம் என்பர் சிலர். வள்ளுவர் பெருமான் இவை அனைத்தையும் ஒப்பவில்லை. அவனுக்கு இன்றியமையாது வேண்டப் பெறுவது மன உறுதி ஒன்றே என்பது அப்பெருந்தகையின் கருத்து. . வினைத்திட்பம் என்பது ஒருவன்மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற (661) என்பது அவர்தம் மறைமொழி. ஒரு தொழிலினிடத்துத் திண்மை என்று சொல்லப் பெறுவது ஒருவனது உள்ளத்து உறுதியேபாகும்; மற்றையவை யாவும் இதற்கு அடுத்தபடியே யாகும் என்பது இதன் பொருள். இதனையும் வணிகன் வழி காட்டும் ஒளி விளக்காகக் கொள்ளவேண்டும். நாணயம் - சொன்னபடி இருப்பதும் நடப்பதும்: வாணிகத்தில் முதலுக்கு அடுத்தபடியாக வேண்டப் பெறுவது இது. ஒரு வாணிக நடவடிக்கையில் 30 நாட்கள் கெடு என்றால், 28, 29ஆம் நாளில் கொடுப்பவன் நாணயமுள்ளவன். கெடு தாண்டினால் நாணயம் காற்றில் பறந்து விடும். ஒரு மூட்டையைக் காட்டி இந்த மூட்டை 30 கிலோ இருக்கும்' என்று சொன்னால், ஒரு துணி சுருளைக் (Roll) காட்டி, இந்தச் சுருளில் 50 மீட்டர் துணி இருக்கும் என்று சொன்னால், சொன்னபடி இருக்கவேண்டும். இருந்தால்தான் நாணயம். குறைந்தால் நாணயம் பறந்து விடும். நாடார் பெருமக்களின் வாணிகத்தில் இந்த நாணயம் கெடாதிருப்பதைக் கண்டுள்ளேன். தம் தந்தையார் பெரியண்ண பிள்ளை இருக்கும்போதே விசுவநாதத்தின் சொந்தப் பொறுப்பிலேயே வாணிகம் நடைபெற்று வந்தது. தந்தையிடமிருந்து புகையிலைத் தொழில் நுட்பத்தையும் நாணயத்தையும் மிக உன்னிப்பாகக் கவனித்து அவரைப்போல் தம்மையும் தகுதியுடையவராக ஆக்கிக் கொண்டார் அண்ணல் விசுவநாதம்.