பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்தவித்தகர் : 67 கெடுப்பது நமச்சிவாயவே (4), நங்களுக் கருங்கலம் நமச்சிவாயவே (5) என்றெல்லாம் பன்னியுரைக்கின்றார், முத்தாய்ப்பாக, நாப்பிணைதழுவிய நமச்சி வாயப்பத்(து) ஏத்தவல் லார்தமக்(கு) இடுக்கண் இல்லையே (10) என்று கூறிமுடிப்பர். கற்றுணைப் பூட்டி இவரைக் கடலிற் பாய்ச்சியபோது நற்றுணையாக நின்றது இந்த ஐந்தெழுத்து மந்திரந்தானே திருக்குறுத் தொகைப்பதிகம் ஒன்றில் (5. 90) நமச்சி வாயவே ஞானமும் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின்றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே (2) என்று ஐந்தெழுத்து மந்திரத்தின் சிறப்பை மிகவும் தெளிவாக்குவர். நல்லக விளக்கு நமச்சிவாய மந்திரம் என்பது இவர் காட்டும் மதி விளக்கு. சிவகதி காட்டும் விளக்கும் இதுதான். இதனால்தான், கருவாய்க் கிடந்துன்கழலே நினையும் கருத்துடையேன்; உருவாய்த் தெளிந்துன்றன் நாமம் பயின்றேன்; உணதருளால் திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறு அணிந்தேன்; தருவாய் சிவகதிநீ பாதிரிப் புலியூர் அரனே. fg என்ற திருவிருத்தத்தால் தமக்குச் சிவகதி வரலாற்றை அருளுமாறு: திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை 19. அப்.தே. 5.30: 2