பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்தவித்தகர் * 71 கந்தரமூர்த்தி இவரது வாழ்வு தனிச்சிறப்புடையது. இறைவனே தோழராக நின்று இவர்தம் வாழ்க்கையில் நேராகப் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் மிக்க சிறப்புடையவை. சம்பந்தர், அப்பர் இவர்கள் வாழ்ந்து நூறாண்டுக்குப் பின் தோன்றியவர். இல்லறத்திலிருந்து கொண்டே தவநெறியைக் கடைப்பிடித்தவர். பரு உடலுடன் பரலோகம் சென்றவர். இவரது ஒருமணத்தைக்கெடுத்த இறைவன், பின்னர் இவருக்கு இருமணங்களை முன்னின்று நடத்தி வைத்தார். அருணாசிரியர்கள். இவருக்கு முன்னிருந்த சம்பந்தர், அப்பர்ஆகிய இருவரையும் போற்றி மகிழ்ந்தவர். நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை - சொல்லிய வேசொல்லியேத்துகப் பானைத் தொண்டனேன்.அறியாமை அறிந்து கல்லியன் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டிஎன்களைகளை அறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின்றானை வலிவலம்தனில்வந்து கண்டேனே.” என்ற திருப்பாடலில் கண்டு மகிழலாம். ஐந்தெழுத்தின் பெருமை; ஏனைய இருவரைப் போலவே இவரும் 'நமசிவாய'ப் பதிகம் பாடியவர். தாம் இறைவனை ஒருகால் மறக்கினும் தமது நா என்றும் சொல்லிக் கொண்டே இருக்கும்’ என்பதை ஒரு பதிகத்தில் பாசுரந்தோறும் பாடி மகிழ்ந்தவர். மற்று பற்றெனக்கின்றி நின்திருப் பாத மேமணம் பாவித்தேன்; பெற்றலும்பெறந்தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன்; 28. கத்த, தே.1.67 :5