பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. (ஆ) மூடப்பழக்கங்கள். எங்குப் பேசினாலும், எதைப் பற்றிப் பேசினாலும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சமூகத்தில் புகுந்துள்ள குருட்டுப் பழக்கவழக்கங்களையும் மூடத் தனங்களையும் சாடுவதில் நம் அண்ணல் தவறுவதில்லை. சாதியற்ற-ஏற்றத்தாழ்வற்ற சமய பேதமற்ற சமுதாயம் இந்நாட்டில் ஏற்பட வேண்டுமென்று பாடுபடும் நோக்கத்தைக் கொண்டது தன்மான இயக்கம். இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு இவர் பேசிய பேச்சுகள் எண்ணற்றவை. காரண காரியத் தொடர்பற்ற எதையும் இவர் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு சமயம் அவர் சொன்னது: 'கடவுளாயிருந்தாலும் கருதிப் பார்; காந்தியாயிருந்தாலும் அலசிப்பார் என்று கூறுவதோடு நின்று விடாதே. பெரியரா விருந்தாலும் சிந்தித்துப் பார் என்று கூறு; இன்றேல், பகுத்தறிவை விட்டு விலகி விடுவோம்' என்பதாக, கடவுள், சமயம், புராணம் இவற்றைப் பற்றிக் கூறும் கருத்துகள் யாவும் பகுத்தறிவு உலையில் புடம் போட்டவையாக இருக்கும். உடன்கட்டை ஏறலைச் சட்டபூர்வமாகத் தடுத்து நிறுத்தப் போராடிய இராஜராம் மோகன்ராயின் சீர்திருத்தத் தொண்டைப் பாராட்டும் முகத்தான் திருச்சியில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினார். அப்போது, பிறந்த தம் ஆண் குழந்தைக்கு 'இராஜாராம் என்று திருநாமம் சூட்டி மகிழ்ந்தார். இவருடைய சீர்திருத்தக் கொள்கை விநோதமானது. ஒரு தனிப் போக்குடையது. ஓமியோபதி மருத்துவம் போன்றது! மாற்றாரை நேரடியாகக் குறை கூறாமல் வேடிக்கையாக உண்மையை உளங்கொள்ளும் வகையில் விளக்கும் போக்குடையவர். இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருவேன். (1) திருக்கழுக்குன்றத்தில் மலைமீது நாள்தோறும் இரண்டு கழுகுகள் காசியிலிருந்து உணவு எடுத்துக் கொள்ள வருவதாக வைதிகர்கள் கதை கட்டியிருக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒருகாரியம் செய்தார்தம் வீட்டில். நாடோறும் தம் வீட்டு மாடியில் குறிப்பிட்ட காலை நேரத்தில்