பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. கோட்டைகள் சரியத் தொடங்கின. தன்மானச் சூறாவளி பழமையை அடியோடு தகர்த்தது. வைதிகம் பகுத்தறிவால் வீழ்ந்தது. இப்யூடி அண்ணல் சொற்பொழிவுகள் அவனிக்கு நலம் பயந்தன. பேச்சு மேடையில் மாற்றம்: அண்ணல் விசுவநாதம் பேச்சுத் துறையில் இறங்கியதால் தமிழ் பேச்சு நடையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது." மறைமலையடிகள், பண்டிதமணி, நாவலர் வேங்கடசாமி நாட்டார் போன்ற பெரும்புலவர்களின் பேச்சு நடைப்பாணி அண்ணலின் பேச்சு நடையில் இளகியது; எளிதாகவும் கவர்ச்சியுடையதாகவும் மாறியது. புலவர்கட்கே உரிய பேச்சு நடையைத் தமிழ் ஆர்வலர்கட்கும் உரியதாக அமைந்தது. தன்மான இயக்கத்தின் சிந்தனை, பேச்சு, தமிழ் இவையனைத்தும் அண்ணலின் நுழைவிற்குப் பிறகு சீர்திருந்தியது. கொச்சையற்ற அழகு தமிழால், ஆணித் தரமான பேச்சாய், மாற்றார் மனத்தையும் மாற்றக்கூடிய ஆற்றலுடைய தாய், மாறியது. பண்டிதத் தமிழுக்கும் பாமரத் தமிழுக்கும் இடைப்பட்டதான தமிழ்நடை பிறப்பதற்கு அண்ணலின் பங்கு அளப்பரியது; வரலாற்றுப் புகழ் பெற்றது. பாராட்டுரைகள்: அண்ணல் விசுவநாதத்தின் பேச்சாற்றலை வியந்து பாராட்டுரைகள் குவிந்தன. நில்கண் பெருமாள், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நாவலர் நெடுஞ்செழியன், மு. அண்ணல், திரு.கோ. நாவலர், ச. சோமசுந்தர பாரதியார் போன்ற பேச்சாளப் பெருமக்கள்பாராட்டியுள்ளனர்.” இருவர் புகழுரைகளை மட்டிலும் ஈண்டு தருகின்றேன். 'கேட்டவர் பிணிக்கும் தகையராய், கேளாரும் வேட்ப மொழியும் இந்நாவலர் பிறவியில் பேச்சாளி; சிறந்த எழுத்தாளர். நகைச்சுவை மிளிர ஆழ்ந்த கருத்துகளைக் கேட்பவர் அகத்தூன்றப் பேசி, இன்பமும் பயனும் 1. திருக்கி விசுவநாதம் - பக்.90 12. அண்ணா பேச்சு தடையில் அடுக்குமொழி நடைமக்கள் மனத்தைக் கவர்ந்ததை ஈண்டு நினைவு கர்தல்தகும். 13. திருக்கி விசுவநாதம் பக் 131 - 123