பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 & முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. உலகப் பெரும் போர் காரணமாக காங்கிரசுக்கும் வெள்ளை யாட்சியினருக்கும் கருத்து வேற்றுமை எழவே காங்கிரசு அமைச்சரவை வெளியேறியது. ஆளுநர் ஆட்சியில் இந்தியைக் கட்டாய பாடத்திலிருந்து விருப்பப் பாடமாக இறக்க இசைவு தெரிவித்தனர். போராட்டத்தில் அண்ணலாரின் பங்கு: அண்ணலாரின் பங்கு மிகப் பெரியது. இந்தி ஆதரவுக்காக ஒரு சமயம் இராஜாஜி திருச்சி வந்தபோதும், சேலம், தருமபுரியிலும் நம் அண்ணல் நேருக்கு நேர்ந்து வினாக்கணைகளை விடுத்துத் திணற அடித்த செய்திகள் வரலாற்றில் இடம் பெற வேண்டியவை. (அ) திருநெல்வேலி நக்ரத்திலும், அந்நகர சந்திப் பிள்ளையார் முக்கிலும், எட்டயபுரத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் அண்ணலாருக்குக் கிடைத்த வெகுமதி கல்லடிகள். இவற்றையும் பொறுத்துக் கொண்டு அண்ணலார் தமது கடமைகளை உறுதியுடனும் சலியாமலும்ஆற்றிவந்தார். (ஆ) கட்சி வேலையில் முழுக்கமுழுக்க ஈடுபட்டதால், சொந்தத் தொழிலைக் கவனிக்க முடியவில்லை. தமது மகன் இராசரத்தினம் மறைந்ததையும் அதிகமாகப் பொருட்படுத் தாமல் இயக்கப்பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததை எவரும் மறக்கவில்லை. சுற்றுப்பயணச் செலவும் காலாவதியான புரோநோட்டுகளின் தொகையும், வாணிக நட்டமும் சேர்ந்து ரூ. 12,000/- வரை இழப்பு நேரிட்டமை பலருக்குத் தெரியாது; அவருடன் நெருங்கிய பழகிய ஒரு சிலரே அறிவர். (இ) இந்தி எதிர்ப்புக் காலத்தில் அவர் திரட்டிய நிதிக்கும் ஆகிய செலவிற்கும் வைத்திருந்ததனிக் கணக்குப்புத்தகத்தைக் கண்டு வியந்து போற்றாதவர்களே இலர். பெறும் பணத்தை விழுங்கி ஏப்பமிடுவார்பெருகியுள்ள காலத்தில் இங்கனம் ஒரு நேர்மையும் ஒழுங்குமுள்ள அண்ணலாரைக் காணும்போது வள்ளுவர் வழியில் நடந்த ஒருவருக்கு எடுத்துக் காட்டாகின்றார்.