பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

47



12 நீதி சிறந்த மதுரை

மதுரை நகரம் மிகவும் சிறப்புற்றிருந்த பற்பல செய்திகளையும் நாம் கண்டோம். இனி, மதுரை நகரம் அதனைக் காத்துவந்த பாண்டியரின் அறச் செப்பத்தினாலேயும் அந்நாளிற் புகழுடைய பேரூராகத் திகழ்ந்தது. அந்தச் சிறப்பினைப்பற்றிய செய்திகளை இந்தப் பகுதியிலே காண்போம்.

தென்னவனின் கொற்றம்

‘அந்தணர் ஓதுகின்ற மறைகளின் ஒலியே அல்லாமல், ஆராய்ச்சி மணியின் ஓசையினை என்றும் கேட்டறியாதவர் பாண்டிய மன்னர்கள்’ என்று சொல்லுகிறது சிலம்பு. மேலும், கட்டுரைக்காதையுள், மதுராபதித் தெய்வத்தின் வாயிலாக உணர்த்தப்படுகின்ற பாண்டியரின் பெருமைகளை எல்லாம் நாமும் காண்போம்.

இளமை யானை

மனம் எப்பொழுதும் இச்சைகளின் வயப்பட்டுக் கட்டவிழ்ந்து செல்லும் இயல்பினது. கல்வியறிவாகிய பாகனைக் கொண்டு அதன் போக்கினைக் கட்டுப்படுத்த வேண்டும். கல்விப் பாகனின் கைக்குள் அகப்படாது, அடங்காத வெறியுடன் ஓடுவதே பெரும்பாலும் உள்ளத்தின் தன்மையா யிருக்கும். ஆனால், பாண்டியர் ஒழுக்கத்துடன் பொருந்திய தூய குடியினர். அதனால், இந்தப் பொதுவான மனவியல்பும்கூடப் பாண்டிய மன்னரைச் செப்பத்தினின்றும் அகலச் செய்து விடுவதில்லை. அவருக்குக் குறைகளைக் கொண்டு சேர்த்து விடுவதும் இல்லை.

பொற்கைப் பாண்டியன்

கீரந்தை என்பவன் ஒருவன் இருந்தான். அவன், தன் மனைவியைப் பிரிந்து வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. தனிமையை நினைந்து அவள் கலங்கினாள். ‘அரசவேலி இருக்கும்வரை நீ அஞ்சுதற்குக் காரணமில்லை’ என்று அவளைத் தேற்றிவிட்டு, அவனும் வெளியூர் போய்விட்டான். அவளும் ஓரளவு அச்சமின்றி வாழ்ந்து வந்தாள்.

இவர்கள் பேசிய பேச்சை நகர் காவலாகச் சுற்றி வந்த பாண்டிய மன்னன் கேட்டான். கீரந்தையின் நம்பிக்கை அவனுள்ளத்திலே பெருமித உணர்வை எழுப்பிற்று. இரவு