பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கணம் தந்த தவமுனிவர் 5

ஒன்றில் கங்கை நீரை முகந்து கொடுத்தார். 'நீர் இந்த நீரை எவ்விடத்துச் சித்திலுைம் அவ்விடத்தினின்று கங்கை பெருகியோடும்' என்று திருவருள் செய்தார். கமண்டல நீரைப் பெற்ற முனிவர் தென்னுடு கோக்கிப் புறப்பட்டார். அவர் வரும் வழியில் விந்த மலே அவர் வேகத்தைத் தடுத்தது. அம் மலேயை அடக்கித் தென்னுட்டை அடைங் தார். அதனல் விந்தம் அடக்கிய வித்தகர்' என்ற சிறப்பைப் பெற்ருர்,

காகம் கவிழ்த்த கமண்டலம்

ஒரு காள் காலே வேளையில் அகத்தியர் குடகு மலேயை அடைந்தார். அம் மலேச் சாரலில் இடைச் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அகத்தியர் அச்சிறுவன அழைத்து அவன் கையில் கமண்டலத்தைக் கொடுத்தார். இதனைச் சிறிது பொழுது வைத்திரு' என்று சொல்லிக் காலேக்கடனே முடிக்கச் சென் ருர். அவர் சென்ற சிறிது கேரத்தில் இடைச் சிறுவன் கமண்டலத்தைக் கீழே வைத்தான். அப் போது காகம் ஒன்று அக்கமண்டலத்தின்மீது வந்து அமர்ந்தது. கமண்டல நீரில் பாதியைக் கவிழ்த்து விட்டது. அவ்விடத்திலிருந்து ஆருென்று தோன்றி ஓடத் தொடங்கியது.