பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

அதுவே காவிரியாறு எனப்பட்டது. காகம் விரித்துத் தோன்றிய காரணத்தால் காவிரி என்று பெயர் பெற்றது என்பர்.

விகாயகர் விளையாட்டு

ஆனேமுகக் கடவுளாகிய விநாயகன் அகத்தியரிடம் சிறு வேடிக்கை செய்ய விரும் பினுன். அவனே இடைச் சிறுவன் வடிவில் வந்தான். முனிவரின் கமண்டலத்தைக் கையில் வாங்கின்ை. அவர் அகன்றதும் கமண்டலத்தைக் கீழே வைத்துக் காகத்தின் வடிவெடுத்தான். அக்கமண்டல நீரைக் கவிழ்த்துக் காவிரியாறு பெருகச் செய்தான். முனிவர் எஞ்சிய ருேடன் கமண்டலத்தை எடுத்துக்கொண்டு கடந்தார். தென்னுட்டுப் பொதிகை மலையை அடைந்தார். பொதிகை மலையில் போருகை

அம்மலையினே அடைந்த அருந்தவ முனிவர் மலைமேல் இருந்த பாறை யொன்றின் மீது எஞ்சிய கமண்டல கீரைக் கவிழ்த்தார். தாமிரக் கமண்டலத்திலிருந்து பெருகிய தண்ணிர் தாமிரவருணியாகப் புறப்பட்டது. அவ்வாற்றுர்ே எப்போதும் தண்மை மாருது இருந்தது. அதல்ை அவ்வாற்றைத் தண் பொருநை என்றும் மக்கள் போற்றினர்.