பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

காட்டு வேந்தனகிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு மைந்தர் இருவர். மூத்தவன் செங்குட்டுவன், இளையவன் இளங்கோ. இவ் விளங்கோவே இளம்பருவத்தில் துறவு பூண்ட மையால் இளங்கோவடிகள் எனப்பட்டார். இவரே சிலப்பதிகாரக் காவியத்தைப் பாடிய செந்தமிழ் முனிவர் ஆவர்.

அரசவையில் நிமித்திகன்

ஒரு நாள் சேர வேந்தகிைய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் அத்தானி மண்டபத்தில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் மைந்தர் இருவரும் அமர்ந்திருந்த னர். அமைச்சரும் பரிவாரத்தாரும் புடை குழச் சேரன் வீற்றிருந்தான். அவ்வேளையில் வேந்தனேக் காண நிமித்திகன் ஒருவன் வங் தான். அவன் மைந்தர் இருவருடன் மன்னன் வீற்றிருப்பதைக் கண்டான். அம்மூவரையும் நிமித்திகன் கூர் ங் து நோக்கி ைன். முடி மன்னனுகிய சேரலாதன நோக்கி, ' அரசே! தங்கட்குப் பின்பு முடி சூடும் தகுதியுடை யவன் இளங்கோவே ' என்று இயம்பின்ை.

தம்பியின் தவக்கோலம்

அதைக் கேட்ட மூத்த மைந்தனகிய செங் குட்டுவனுக்குச் சினம் பொங்கியது. அதைக்