பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காவியம் பாடிய முனிவர் 11

கண்ட இளங்கோ, தமையனின் சினத்தைத் தணிக்க நினைத்தார் ; அவன் மனத்துயரை அப்பொழுதே மாற்ற எண்ணினர். உடனே ஆசனத்தை விட்டு எழுங்து அரண்மனேயுள் புகுந்தார். சற்று நேரத்தில் காவியுடையுடன் முற்றுங் துறந்த முனிவராகக் காட்சி யளித் தார். தம்பியின் தவக்கோலத்தைக் கண்ட தமையனின் சினம் தணிந்தது; துயரமும் தொலைந்தது. இளங்கோவின் தவக்கோலத் தைக் கண்டு தங்தை சிந்தை கலங்கின்ை. தம்பியின் தியாக உள்ளத்தைக் கண்டு தமை யன் கண்ணிர் சிந்தின்ை. தம்பியாகிய இளங் கோவைத் தன் மார்போடு சேர்த்துத் தழுவிக் கொண்டான்.

குணவாயில் கோட்டத்தில் தவமுனிவர்

தவக்கோலம் பூண் ட முனிவராகிய இளங்கோவடிகள் அன்றே அரண்மனே வாழ் வைத் துதந்தார். வஞ்சி மாநகரின் கீழ்த் திசையில் திருக்குணவாயில் என்னும் ஊர் இருந்தது. அவ்வூரில் சமணர் வாழும் தவப் பள்ளியொன்று விளங்கிற்று. அது குண வாயிற் கோட்டம் என்று கூறப்படும். அரச வாழ்வைத் துறந்த அடிகள் அக்கோட்டத்தில் சென்று தங்கினர், அவர் தம் தவ வாழ்வைத் தமிழ் வாழ்வாக மாற்றினர். சீத்தலைச் சாத்