பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

தைைரத் தமக்குத் தமிழாசாகைக் கொண் டார். அவர் பால் தமிழ் இலக்கிய இலக்கணங் களே இனிது கற்றுப் பெரும்புலமை பெற்ருர்,

மலைவளம் காண மன்னன் புறப்படல்

தமிழ்ப்புலமை பெற்ற தவமுனிவராகிய இளங்கோவடிகள் இடையிடையே வஞ்சி மாநகருள் புகுவார். தமையனாகிய செங்குட்டு வனின் அரசவையில் கலந்து மகிழ்வார். ஒரு சமயம் செங்குட்டுவன், தன் காட்டு மலைவளத் தைக் காணப் புறப்பட்டான். அவன் தன் பட்டத்தரசியாகிய வேண்மாளுடனும் தம்பி யாகிய இளங்கோவுடனும் மலே காட்டிற்குச் சென்ருன். அங்குள்ள பேரியாற்றங்கரை மணல் மேட்டில் அனைவரும் தங்கினர். அவர் களுடன் தமிழாசிரியராகிய சாத்தனரும் வந்து தங்கினர்.

மலைநாட்டில் வேட்டுவரைக் காணல்

செங்குட்டுவன் மலைவளம் காண வந்தி ருக்கும் செய்தியை மலையில் வாழும் வேட்டு வர் அறிந்தனர். மலேயிலுள்ள அரிய பொருள் களே யெல்லாம் அரசனுக்குக் கையுறையாக எடுத்துக் கொண்டு வந்தனர். பேரியாற்றங் கரையில் வீற்றிருந்த வேந்தனேக் கண்டு களித்தனர். அவனே வாழ்த்தி அடி பணிந்து