பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

அமர்ந்திருந்தனர். அவர்கள் அப்பெண்ணின் மீது மலர் மாரி சொரித்தனர். அவ்விமானத் தில் இருந்த அவள் கணவனேத் தேவர்கள் அவளுக்குக் காட்டினர். கணவனைக் கண்ட அப்பெண் களிப்புடன் அவ்விமானத்தில் ஏறிக் கொண்டாள். சிறிது கேரத்தில் அவ் விமானம் விண்ணில் பறந்து மறைந்தது. அந்தப் பெண், தெய்வமாகவே திகழ்ந்தாள். அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவளோ? யார் பெற்ற மகளோ ? நாங்கள் அறியோம். இச் செய்தியை அரசராகிய தங்களிடம் அறிவிப்ப தற்காகவே நாங்கள் இங்கு வங்தோம்' என்று கூறி வாழ்த்தி நின்றனர்.

புலவரின் புன்சிரிப்பு

குன்றக்குறவர் கூறிய செய்தியைக் கேட்டுச் செங்குட்டுவன் முதலானேர் வியப் புக் கொண்டனர். அப்போது அங்கிருந்த தமிழாசிரியராகிய மதுரைச் சாத்தனர் அச் செய்தியைக் கேட்டு வியப்புறவில்லை. அவர் சிறிதே புன்சிரிப்புக் கொண்டார். அதைக் கண்ட செங்குட்டுவன், புலவரின் புன்சிரிப்புக் குக் காரணம் யாதெனக் கேட்டான். அங் கிருந்த இளங்கோவடிகளும் உண்மையை உணர விரும்பினர். கோப்பெருந்தேவியாகிய வேண்மாளும் புலவரின் சொற்களைக் கேட்கப்