பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காவியம் பாடிய முனிவர் 15

பெரிதும் விரும்பினுள். அமைச்சர் முதலான சுற்றத்தார் எல்லோரும் புலவரின் கருத்தை

அறியும் விருப்புடன் இருந்தனர்.

சாத்தனுரின் விளக்கம்

சாத்தனுராகிய புலவர் அங்கிருந்த எல்லோருடைய உள்ளத்தையும் அறிந்து கொண்டார். குன்றக்குறவர் கண்ட கற்பரசி யின் வரலாற்றை விளக்கமாகச் சொல்லத் தொடங்கினர். 'மதுரை மாககளில் அரசன் ஆணையால் கண்ணகியின் கணவன் கொலை யுண்டான். அதனுல் கடுங்துயரம் அடைந்த கண்ணகி, மன்னன் முன்னே சென்று வழக் காடினுள. தன கணவன களவன அலலன, குற்றமற்றவன் என்று நிலைகாட்டினுள், தவறுணர்ந்த அரசன் சிங்காதனத்திலிருந்து மயங்கி வீழ்ந்து மாண்டான். பின்பு கண்ணகி யின் கற்புத் தீயால் மதுரை மாநகரம் எரிந்தது” என்று கூறி முடித்தார்.

கண்ணகிக்குக் கற்கோவிலும் கலைக்கோவிலும்

இவ்வாறு சாத்தனுர் வாயிலாகச் செங் குட்டுவனும் இளங்கோவடிகளும் கண்ணஇ யின் வரலாற்றைத் தெரிந்தனர். செங்குட்டு வன் பத்தினிக் கடவுளாகிய கண்ணகிக்கு வஞ்சி மாநகரில் கோவில் அமைக்க எண்ணி