பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காவியம் பாடிய முனிவர் 17

பாடி னுர், அதனைத் தம் கண்பரும் மாணவரு மாகிய இளங்கோவடிகளிடம் வாசித்துக் காட்டினுள். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே காலத்தில் தோன்றிய இரட்டைக் காவி யங்கள் ஆகும். இவை இரண்டும் ஐம்பெருங் காவியங்களேச் சேர்ந்தன ஆகும்.

இளங்கோவின் இனிய உள்ளம்

இளங்கோவடிகளின் துரப்மை வாய்ந்த உள்ளம் சிலப்பதிகாரத்தால் நன்கு விளங்கும். அவர் அக்காவியத்தின் இறுதியில் பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்' என்று தொடங்கிச் செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்' என்று முடிக்கும் செய்யுள் அவர் உள்ளத்தைத் தெள்ளிதில் காட்டும். கல்வினை செய்தவர் கன்மையே அடைவர். ஆதலால் நல்லறமே செய்து உய்யுமாறு உலக மக்களே அவர் வேண்டுகிரு.ர்.

தமிழ்த்தாய்க்குச் சிறந்த அணிகலன்

சேர நாட்டு இளங்கோவாக விளங்கிய முனிவர் இனிய செந்தமிழ்ப் புலவர் ஆவர். அவர் தமிழ்ப் பெருங்காவியம் ஆகிய சிலபபதி காரத்தை இயற்றித் தமிழ்த்தாய்க்குச் சிறந்த அணிகலனுகப் பூட்டி மகிழ்ந்தார்.

மு. வ. மு.-2