பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அறதுல் தந்த அருந்தவர்

திருக்குறளும் நாலடியாரும்

அருந்தமிழ் மொழியில் அறம் உரைக்கும் நூல்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் முதன்மை வாய்ந்தது திருககுறள் என்னும் அறநூலே ஆகும். அது அறநூல் என்றே அறிஞரால் போற்றப்படும். அதற்கு இனே யாக வைத்து மதிக்கப்படும் மற்ருெரு நூல் 'நாலடியார்'என்னும் அறநூல் ஆகும். இவ் விரண்டு நூல்களின் பெருமையையும் அறிந்த அறிஞர்கள் இவற்றை ஒன்ருகவே சேர்த்துப் பாராட்டினர்.

இரு நூல்களின் பேருமை

தமிழ்ச் சொல்லின் அருமையைக் காண வேண்டுமாயின் திருக்குறளேயும் காலடியாரை யும் கற்கவேண்டும் என்று கருதினர் ஒளவை யார். ஆதலின் பழகு தமிழ்ச் சொல்லருமை காலிரண்டில் பார்பின்' என்று பாடினர் அப் பெண்பாற் புலவர். காலென்பது நாலடி யாரையும், இரண்டு என்பது திருக்குறளேயும் குறிக்கும். இந்நூல்களின் சிறப்பை உணர்ந்த கம் முன்னேர், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, காலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி