பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மந்திரம் தந்த மாமுனிவர்

பெரிய புராணத்தில் திருமூலர்

த்மிழில் புராண நூல்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று பெரிய புராணம் எனப் படும். அது சிவனடியார்கள் ஆகிய பெரியவர் களின் வரலாற்றை எடுத்துரைக்கும் பக்தி நூல் ஆகும். அதனைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். அந்நூலில் அறுபத்து மூன்று சிவனடியார்களின் வர லாறுகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று திருமூல நாயனர் புராணம் ஆகும். அத்திருமூலரே மந்திரம் தந்த மாமுனிவர் ஆவார். தமிழ் மூவாயிரம்

சைவ சமயத்தில் தோத்திர நூல்களாகப் பன்னிரண்டு திருமுறைகள் உள்ளன. அவற் றுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது திருமந்திரம். அந்நூல் மூவாயிரம் பாடல்களே உடையது. ஆதலின் அது 'தமிழ் மூவாயிரம்' என்றும் கூறப்படும். திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்' என்பதல்ை அதன் பெருமை விளங்கும். இத் திருமந்திர நூலைப் பாடியவரே திருமூலர் என்னும் முனிவர் ஆவாா.