பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

கயிலையில் குருகுலம்

சிவபெருமான் எழுத்தருளி யிருக்கும் இடம் கயிலேத் திருமலே ஆகும். அங்கு நந்தியம் பெருமான் குருகுலம் ஒன்றை கடத்தினர். அக் குருகுலத்தில் பயிலும் மாணவர்க்கு இறைவன் திருவருள் பெறுவதற்குரிய ஞான நூல்கள் கற்பிக்கப்பட்டன. அதில் எட்டு மாணவர்கள் பயின்றனர். அவர்கள் சனகர், சனங்தனர், சனதனர், சனற் குமாரர், சிவ யோகமாமுனி, பதஞ்சலி, வியாக்கிரமர், சுங்தர காதர் என்போர் ஆவர். இவ்வெட்டுப் பேர் களுள் ஒருவராகிய சுந்தரா தரே பின் நாளில் திருமூலர் ஆயினர்.

சுந்தாகாதர் தென்னுட்டிற்கு வருதல்

சுந்தரர், கயிலேக் குருகுலத்தில் ஞான நூல்களைப் பயின்று தேர்ந்தார். அதன் பயனுக நாதன்' என்னும் பட்டத்தைப் பெற்ருர். சுந்தரநாதர் என்று சிறப்பாகக் குறிக்கப்பட்டார். இவர் ஒரு முறை பொதிகை முனிவராகிய அகத்தியரைக் கண்டு அளவ ளாவப் புறப்பட்டார். வழியில் உள்ள திருக் கேதாரம் முதலிய தலங்களைத் தரிசித்து மகிழ்ந்தார். கங்கையில் நீராடிக் களித்தார். தென்னடு நோக்கி நடந்து இடையில் உள்ள