பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரம் தந்த மாமுனிவர் 25

சிவத்தலங்களே எல்லாம் சேவித்தார். சோழ நாட்டுக் காவிரி யாற்றில் நீராடித் திளேத்தார்.

காவிரிக் கரையில் கண்ட காட்சி

சுல்தர நாதர் சோழ நாட்டில் உள்ள திருவாவடுதுறையை அடைந்தார். அத்தலத் தின் மீது அவருக்கு அளவில்லாத காதல் எழுந்தது. எனினும் நண்பராகிய அகத் தியரைக் காணும் அவாவால் காவிரிக் கரையின் வழியே கடந்தார். அவர் செல்லும் வழியில் உள்ளத்தை உருக்கு காட்சி ஒன்றைக் கண் டார். அக் காட சி, அவரை மேலே செல்ல விடாமல் தடுத்துவிட்டது.

மூலனைச் சூழ்ந்த பசுக்கள்

காவிரியாற்றின் கரையில் அக்தனர் வாழும் சாத்தனுார் என்னும் நகர் ஒன்று இருந்தது. அங்ககளில் மூலன் என்னும் இடை யன் ஒருவன் வாழ்ந்தான். அவன் அவ்வூர்ப் பசுக்கூட்டத்தைமேய்ப்பவன். அவன் அப்பகக் களே மிக்க அன்புடன் மேய்த்து வருவான். அன்று மேய்க்க வந்த இடத்தில் திடீரென்று உயிர் நீத்து விட்டான். இறந்துபோன அவனைச் சூழ்ந்து பசுக்கள் கண்ணிர் வடித்துக் கொண்டு நின்றன. அதுதான் சுந்தரகாதரின் சிங்தையை உருக்கிய காட்சி ஆகும்.