பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

அவளுக்கும் தமக்கும் மாசை விளைவிக்க முனி வர் விரும்புவாரோ ? ஒன்றும் செய்ய முடி யாமல் வீட்டிற்கு வரமுடியாது என்று மட்டும் மறுத்து விட்டார். பின்பு அங்கு இருந்த திருமடம் ஒன்றில் புகுந்து யோகத் தில் அமர்ந்தார்.

உறவினர் கண்டு உண்மை உரைத்தல்

இடையன் மனைவியும் அம்மடத்தில் புகுந்தாள். அன்று இரவெல்லாம் உறக்க மின்றி உள்ளம் வருக்தி இருந்தாள். தன் கணவன், கன்னே ஏன் மறுத்தான் என்று கலங்கிக் கிடந்தாள். மறுநாள் பொழுது புலர்ந்தது. இடையன் மனைவி, தன் உறவி னரை அடை த்து உற்ற செய்தியை உரைத் தாள். ஓவென்று கதறி ஓலமிட்டு அழுதாள். அவர்கள் அவளுடன் திருமூலர் இருந்த திரு மட த்தை அடைந்தனர். அவருடைய உயர்ந்த கிலேயைத் தெரிந்து திகைததனர். அவளிடம், 'உன் கணவர் துறவியாகி விட்டார்; ஆதலின் அவரைத் திருப்ப முடியாது' என்று கூறிச் சென்று விட்டனர். அது கேட்ட இடைப் பெண், தன் கணவனுக்குப் பித்துப் பிடித்தது என்று எண்ணினுள். த னும பித்துப் பிடித்த வளாய் வீட்டை அடைந்து வெதும்பி வாடினள்.