பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரம் தந்த மாமுனிவர் 29.

திருமூலர் ஆவடுதுறையை அடைதல்

திருமூலர் மீண்டும் பசுக்கள் வந்த வழியே சென் ருர். மறைவில் வைத்து வந்த தமது உடலேத் தேடினர். அதனேக் காண வில்லை. யோகத்தில் அமர்ந்து ஆராய்ந்தார். இதுவும் சிவபெருமான் திருவருள் என்று தெரிந்தார். இறைவன் அருளிய ஆகமப் பொருளேத் தமிழில் ஆக்குவதற்காக அப் பெருமான் அருளிய ஆணேயெனத் தெளிங் தார். தம்மைத் தொடர்ந்து வந்த இடையர் களுக்குத் தாம் இன்னரென விளக்கினர். அவர்களிடம் விடைபெற்றுத் திருவாவடு துறையை அடைந்தார்.

தமிழ் மூவாயிரத்தைத் தருதல்

அங்குள்ள திருக்கோயிலே அடைந்து சிவ பெருமான் திருவடியைப் பணிந்தார். அக் கோயில் திருமதிலுக்கு வெளியே மேற்குத் திசையில் விளங்கிய அரச மரத்தின் கீழே அமர்ந்தார். அன்று முதல் மூவாயிரம் ஆண்டு கள் அவ்விடத்திலேயே அருந்தவம் புரிந்தார். ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் ஒரு 5ாள் தவத்தினின்று நீங்குவார். அன்று தாம் ஆராய்ந்து கண்ட அரிய உண்மையை அரிய திருமந்திரப் பாடலாகப் பாடுவார். பக்கத்தில் அமர்ந்த அவர் மாணவர் நால்வர் அப்