பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. முருகன் அருள்பெற்ற முனிவர்

தமிழ்க்கடவுள் முருகன்

தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளாகப் போற்றி வழிபடும் தமிழ்க்கடவுள் முருகன் ஆவான். அப்பெருமானேக் குறிஞ்சி நில மாகிய மலேகாட்டுத் தெய்வமாக மக்கள் போற்றுவர். அதனுல் அப்பெருமானேக் 'குறிஞ்சிக் கிழவன்' என்றே கொண்டாடுவர். முருகப்பெருமான் சிறப்பாக ஆறு தலங்களில் அமாங்து அருள் செய்கின் முன். அவை ஆறு படைவீடுகள்' என்று கூறப்படும்.

ஆறுபடை வீடுகளில் ஒன்று செந்தார்

பகைவரை அழிக்கும் வலிமை வாய்ந்த படைகள் தங்கும் இடத்தைப் படைவீடு என்றும், பாடி வீடு என்றும் கூறுவர். முருகப் பெருமான் ஆகிய வேல்வீரன், தன் படை களுடன் அப பாடிவீடுகளில் தங்கினன் என்பர். தேவர்களே மிகவும் துன்புறுத்தி வந்த அசுரர்களே அழிப்பதற்காக அப்பெரு மான் வேற்படையுடன் புறப்பட்டான். அவன் தங்கிய ஆறுபடை வீடுகளுள் முதன்மை வாய்ந்தது திருச்செந்துார். அது கடற்கறை யில் அமைந்துள்ளது.