பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அருள்பெற்ற முனிவர் 33

பொருகையின் கரையில் வைகுண்டம்

தென் பாண்டி காட்டில் உள்ள முருகப் பெருமான் உறையும் தலங்களில் தலைமை வாய்ந்தது திருச்செக்துார். அது திருச்செங் துருக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் அமைந்த ஊர் சீவைகுண்டம். அது தண் பொருகை யாற்றின் தடங்கரையில் அமைந்த ஒரு கலமாகும். அந்நகரின் வடபகுதி கயிலாசம் என்றும், தென்பகுதி வைகுந்தம் என்றும் வழங்கப்படும். சீவைகுண்ட நகரின் கபிலாசப் பகுதியில் வேளாளர் குல மக்கள் வாழ்கின்றனர்.

கவிராயருக்கு ஊமைப் பிள்ளே

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ச் சிவை குண்ட நகரின் கயிலாசப் பகுதியில் சண்முக சிகாமணிக் கவிராயர் என்னும் சைவ, வேளாளர் ஒருவர் வாழ்ந்தார். அவர் சிவகாம சுந்தரி என்னும் மங்கை கல்லாரை மணந்து மனேயறத்தை இனிது கடத்தி வந்தார். அவர் கள் இருவருக்கும் நீண்ட காட்களாகப் பிள்ளைப்பேறு வாய்க்கவில்லை. அதனுல் அவர் கள் திருச்செக்துர் முருகப்பெருமானே வேண் டித் தவங்கிடக்தனர். அவர்கள் செய்த அருங் தவத்தின் பயனக ஆண்பிள்ளே ஒன்று பிறந் தது. முருகனேப் போன்று அழகுவாய்ந்த அக்.

3--.مG .له . موق