பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

குழந்தை ஐந்து ஆண்டுகள் கழிந்தும் வாய் பேசாமல் இருந்தது. அதனேக் கண்ட பெற் ருேர் பெரிதும வருந்தினர்.

பெற்றேர் உறுதியும் பெருமான் அருளும்

மீண்டும் அவர்கள் திருச்செந்துரையே அடைந்தனர். முருகப்பெருமான் திருமுன்பு அக்குழங்தையைக் கிடத்தி காற்பது நாள் பட்டினி இருந்தனர். குறிப்பிட்ட நாளில் குழந்தை பேசவில்லேயானல் குழந்தையுடன் கடலில் விழுந்து மடிவோம்' என்று உறுதி கொண்டனர். அப்பெற்ருேரின் உறுதியைச் செந்தில் முருகன் உணர்ந்தான். அவர்கட்கு அருள்புரிந்தான். நாற்பத்தோராம் நாள் காலை யில பொழுது விடிவதற்கு முன் அக் குழங் தையை முருகப்பெருமானே எழுப்பினன். 'குமரகுருபரா!' என்று பெயர் சூட்டி அழைத் தான். கம்மைத் தரிசிக்க வருக!' என்று அருள்புரிந்தான். 'உன் வாக்கிற்குத் தடை ஏற்படும் பொழுது, அதற்குக் காரணமாக இருந்தவனேயே நீ ஞானசிரியனுகக் கொள்க! என்று கூறியருளி மறைங்தான்.

முருகன்மீது பாடிய கலிவெண்பா முதல்நூல்

முருகன் அருள் பெற்ற குழந்தை, தன் பெற்ருேரைத் தட்டி எழுப்பியது. கடலாடிக்