பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

'முத்தமிழ் வளர்த்த முனிவர்கள் என்னும் இச் சிறு துரல் நடுகில்ே வகுப்புக்களில் பயிலும் மாணவர்க்குப் பயன் தரும் வகையில் எளிய கடையில் எழுதப் பெற்றது. உலகப் பற்றை ஒழித்த முனிவர்களும் நம் உயர்ந்த தாய் மொழியாகிய தமிழிடத்தில் கொண்ட பற்றை விட்டொழிக்க முடியாது கற்றுத் தேர்ந்து புலமை பெறறனர். அவர்கள், "தாம் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெற்று மகிழ வேண்டும்’ என்ற உயர்ந்த எண்ணத்தால் அரிய பாடல் களையும் நூல்களையும் ஆக்கியுள்ளனர். அவ்வாறு புனேர் த பாக்களும் நூல்களும் தமிழ்த் தாய்க்கு அணிகளாக விளங்கு கின்றன. அத்தகைய தமிழ்த் தொண்டு ஆற்றிய தவமுனிவர்களின் வரலாறுகள் பத்தினே இந்நூலிற் காணலாம்.

இந்நூலே எழுதுமாறு எளியேனேத் தூண்டியும் வேண்டியும, என்னே எழுத்துப் பணியில் ஊக்கமும் ஆக்க மும் எய்துமாஅ செய்து உதவிவரும் சைவ சித்தாந்த ஆரம்பதிப்புக் கழக ஆட்சியாளர் மாட்சிமிகு வ. சுபபையா பிள்ளே யவர்கட்கு பாது கைம்மாறு செய்ய வல்லேன் ?

என் நூல்களைப் பலகாலும் போற்றித் தத்தம் பள்ளிகளில் பாடமாக்கி, என்னேத் தமிழ்ப பணியில் எங்காளும் ஊக்கிவரும் பனளித் தலைவர்கட்கும் தமிழ்ப் புலவர்கட்கும் கான் என்றும் நன்றியுடையேன். இந் நூலே யும தங்கள பள்ளிகளில் பாடமாக்கி ஆதரித்தருளப் பணிகின்றேன்.

தமிழ் வெல்க !

அ. க. நவநீதகிருட்டிணன்.