பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அருள்பெற்ற முனிவர் 35

கந்தனைத் தரிசிப்போம்!' என்று கூறியது ‘விசுவருப தரிசனத்திற்கு விரைந்து செல் வோம்!' என்று விருப்புடன் உரைத்தது. குழங்கையின் பேச்சைக் கேட்ட பெற்ருேள் பேருவகை அடைந்தனர். குழந்தையுடன் சென்று கடலில் ரோடினர். கோவிலுள்ளே சென்று முருகப்பெருமானேத் தரிசித்து, அவன் திருவருளே வியத்து போற்றினர். அப் பொழுதே குழந்தையாகிய குமரகுருபரர் முருகன்மீது பாமாலே தொடுக்கத் தொடங் கிர்ை. கந்தர் கலிவெண்பா' என்னும் செங் தமிழ்ச் சிறுநூலேப் பாடி முருகனே வழிபட் டார். பின் பெற்ருேருடன் குமரகுரு பரர் தம் ஊரை அடைந்து சிலகாலம் உறைங் தாா,

குருபாரின் தலயாத்திரை

முருகன் அருள்பெற்ற குமரகுருபரர் தம் ஐந்தாண்டுப் பருவத்திலிருந்தே துறவு வாழ்க் கையை மேற்கொண்டார். தமது ஊரை அடைந்த அவர் அங்குள்ள கயிலை நாதரை நாள்தோறும் சென்று வழிபட்டார். அப் பெருமான் மீது கயிலைக் கலம்பகம்’ என்னும் சிறுநூல் ஒன்றைப் பாடினர். சில ஆண்டுகள் கழிந்தபின் குமரகுருபரர் தம் பெற்ருேளிடம் விடை பெற்றுத் தலயாத்திரை செய்யப் புறப்